அதிமுக எம்.பியும், ஓ.பன்னீர்செல்வம் மகனுமாகிய ரவீந்திரநாத் குமார் இந்து முன்னணி சார்பில் நடந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசினார்.

தேனி தொகுதி அதிமுக எம்.பியும், ஓ.பன்னீர்செல்வம் மகனுமாகிய ரவீந்திரநாத் குமார் பாஜகவில் இணையாத குறையாக அக்கட்சியின் திட்டங்களை கண்ணை மூடிக் கொண்டு நாடாளுமன்றத்தில் ஆதரித்து வருகிறார். இந்நிலையில் தேனியில் இந்து முன்னணி சார்பில் நடந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசினார். அப்போது காவித்துண்டு அணிந்து அந்த விழாவில் கலந்து கொண்டார்
@ முதல்வர் வெளிநாடு சென்றுள்ள நிலையில், ரவீந்திர நாத் காவித்துண்டை அணிந்ததை அதிமுகவிற்குள் இருக்கும் அவரது எதிராளிகள் பெரிதுபடுத்த ஆரம்பித்து இருக்கின்றனர்