அதிர வைக்கும் கொள்ளை..

அதிர வைக்கும் கொள்ளை : 7 மணிநேரத்தில் 15,000 பரிவர்த்தனை: இந்திய வங்கியை ‘ஹேக்’ செய்து ரூ. 94 கோடி சுருட்டிய கும்பல்
@ புனேயில் உள்ள இந்தியாவின் இரண்டாவது பெரிய கூட்டுறவு வங்கியின் சர்வரை, ஹாங்காங்கில் இருந்து ஒரு கும்பல் ‘ஹேக்’ செய்து 7 மணிநேரத்தில் 15,000 முறை பரிவர்த்தனை செய்து 94 கோடி ரூபாய் பணத்தை சுருட்டியிருக்கிரது! இந்தியர்கள் சிலருக்கும் இந்த ஹேக்கிங் மோசடி பண பரிமாற்றத்தில் தொடர்பு இருக்கலாம் என கருதப்படுகிறது. இதைடுத்து வங்கியின் சார்பில் புனே சைபர் கிரைம் காவல் பிரிவில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள இந்த வங்கி கொள்ளை குறித்து மகாராஷ்டிர போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.🌐