அத்திவரதரின் சக்தியை எண்ணி பக்தர்கள் பரவசம் அடைந்துவருகின்றனர்.🌐

குளத்தில் சிலை வைக்கப்படும் போது தவறாமல் மழை வரும் என்பது ஐதீகம். அதேபோல் சயன கோலத்தில் அத்திவரதர் அனந்தசரஸ் குளத்தில் உள்ள நீராழி மண்டபத்தில் வைக்கப்பட்ட உடன் மழை பெய்ய தொடங்கியது. தொடர்ந்து மழை பெய்து வருவதால், வரதராஜ பெருமாள் கோவில் வளாகத்தில் உள்ள மலை பிரகாரம், ஆளவந்தார் பிரகாரம், வெளிப்பிரகாரம் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து வரும் மழைநீரால் அனந்தசரஸ் குளம் வேகமாக நிரம்பி வருகிறது. அத்திவரதர் சிலை குளத்தில் வைக்கப்படும் போது மழை வந்து குளம் நிரம்பும் என்று ஏற்கனவே கூறப்பட்டு வந்த நிலையில், ஆமாம் குடிக்கவே தண்ணீர் இல்லை இதில் வேறு மழைவந்து குளம் நிரம்பபோகிறதாம்…! என்று அத்தியை மிக சாதாரனமாக சிலர் விமர்சித்து வந்த நிலையில் அத்திவரதர் வைபவ ஐதீகப்படியே தற்போது மழை வந்து அனந்தசரஸ் குளம் நிரம்பியுள்ளது, பக்தர்கள் எதிர்பார்த்தபடியே அனைத்தையும் நடத்திக்காட்டி அத்திவரதர் தன் பவர் என்ன என்பதை அனைவருக்கும் உணர்த்தியுள்ளார் என்றும், அத்திவரதரின் சக்தியை எண்ணி பக்தர்கள் பரவசம் அடைந்துவருகின்றனர்.🌐