அமெரிக்கப் படையினர் தாக்குதல்: சிரியாவில் ஒரே குடும்பத்தில் 12 பேர் பரிதாப பலி

சிரியாவில் ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாதிகளுக்கு எதிராக அமெரிக்கக் கூட்டுப் படையினர் நேற்று திடீரென நடத்திய தாக்குதலில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 12 பேர் பரிதாபமாக பலியாகினர். பலர் காயமடைந்தனர். இதற்கு அதிபர் பஷார் அல் ஆசாத் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

சிரியாவில் ஐ.எஸ். தீவிரவாதிகளுக்கு எதிராக ராணுவமும், ரஷ்யப் படையினரும் தாக்குதல் நிகழ்த்தி வருகின்றனர். இதனிடையே, சிரியா – ரஷ்யா கூட்டுப்படையினர் நிகழ்த்தும் தாக்குதல்களில், ரசாயன ஆயுதங்கள் பயன்படுத்தப்படுவதாக அமெரிக்கா அண்மையில் குற்றம் சாட்டியுள்ளது.

இதையடுத்து, அந்நாட்டில் உள்ள ரசாயன ஆயுதங்களை அழிப்பதற்காக, அமெரிக்க ராணுவத்தினர் கடந்த மாதம் முதல் அங்கு முகாமிட்டுள்ளனர். மேலும், அந்நாட்டில் உள்ள ரசாயன ஆலைகள், ஐ.எஸ். தீவிரவாத முகாம்கள் மீதும் அமெரிக்கப் படையினர் அவ்வப்போது வான்வழித் தாக்குதல்களை நிகழ்த்தி வருகிறார்கள்.

இந்நிலையில், சிரியாவின் அல் – அஸாக்கா மாகாணத்தில் உள்ள தல் ஷாயேர் கிராமத்தின் மீது நேற்று இரவு அமெரிக்கப் படைகள் மீண்டும் திடீரென வான்வழித் தாக்குதல்களை நிகழ்த்தியது.

இந்தத் தாக்குதலில் பெண்கள், குழந்தைகள் உட்பட ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 12 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். கூட்டுப் படையின் இந்தத் தாக்குதலுக்கு சிரியா அதிபர் பஷார் அல் ஆசாத் கடும் கண்டனத்தைத் தெரிவித்துள்ளார்.– ஐஏஎன்எஸ்

Leave a comment

Your email address will not be published.