அமெரிக்காவில் இறக்குமதி காருக்கு 25% வரி: விலை உயரும் என உற்பத்தியாளர்கள் எச்சரிக்கை!

நியூயார்க்: அமெரிக்காவில் இறக்குமதி செய்யப்படும் கார்களுக்கு 25 சதவீதம் வரி விதிக்கப்படும் என்று அதிபர் ட்ரம்ப் அறிவித்திருந்தார். இந்த முடிவு கடும்  விளைவுகளை ஏற்படுத்தும் கார் உற்பத்தியாளர்கள் எச்சரித்துள்ளனர். இது தொடர்பாக வோக்ஸ்வேகன், பிஎம்டபிள்யு, டோயட்டோ, ஹுண்டாய் உள்ளிட்ட நிறுவனங்கள் அடங்கிய சர்வதேச ஆட்டோமொபைல் நிறுவனங்களின் கூட்டமைப்பு, அமெரிக்க அரசுக்கு கடிதம் ஒன்றை எழுதியுள்ளது.

அதில் ட்ரம்பின் இந்த நடவடிக்கையால் அமெரிக்க ஆட்டோமொபைல் துறைக்கும், அங்குள்ள வாடிக்கையாளர்களுக்கும் பெரிய அளவில் பாதிப்பை ஏற்படுத்தும் என்றும் இறக்குமதி வரி விதிக்கப்பட்டால் கார்கள் விலை அதிகரிப்பதுடன், விற்பனையும் சரிவடையும் எனவும் கூறப்பட்டுள்ளது. அது மட்டுமின்றி இந்த துறையில் பல்லாயிரக்கணக்கானோர் வேலை இழக்கும் அபாயமும் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. முன்னதாக இந்தியா, சீனா உள்ளிட்ட நாடுகளுக்கும், அமெரிக்காவுக்கும் இடையே நிலவும் சீரற்ற வர்த்தக நிலையை சரிசெய்யவே வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யும் பொருட்களுக்கு அதிக வரி விதிக்க முடிவு செய்யப்பட்டதாக அதிபர் ட்ரம்ப் கூறியது குறிப்பிடத்தக்கது.

Leave a comment

Your email address will not be published.