அமெரிக்க எம்.பி. தேர்தலில் போட்டி: இந்திய வம்சாவளியை சேர்ந்த அருணா மில்லர் நம்பிக்கை

அருணா மில்லர்

‘‘அமெரிக்க எம்.பி. தேர்தலில் வெற்றி பெறுவேன்’’ என்று இந்திய வம்சாவளியைச் சேர்ந்த அருணா மில்லர் (53) நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

இந்தியாவின் ஐதராபாத்தில் பிறந்தவர் அருணா மில்லர். தனது 7 வயதிலேயே கடந்த 1972-ம் ஆண்டு அமெரிக்காவில் குடியேறியவர். இங்கு சிவில் இன்ஜினீயரிங் படித்து பட்டம் பெற்றுள்ளார். கடந்த 2010-ம் ஆண்டு முதல் மேரிலேண்ட் மாகாணத்தின் கீழ்சபை உறுப்பினராக இருக்கிறார். தற்போது அமெரிக்க நாடாளுமன்ற கீழ்சபையில், மேரிலேண்ட் பகுதி எம்.பியாக இருந்து வரும் ஜனநாயகக் கட்சியின் ஜான் டிலேனே பதவிக்காலம் முடிவடைகிறது.

அதனால், மேரிலேண்ட் பகுதி எம்.பி. பதவிக்கு இன்று தேர்தல் நடைபெறுகிறது. இந்திய வம்சாவளியைச் சேர்ந்த அருணா மில்லர் ஜனநாயகக் கட்சி சார்பில் போட்டியிடுகிறார். இவர் வெற்றி பெற்றால், அமெரிக்க நாடாளுமன்ற கீழ்சபைக்கு செல்லும் 2-வது இந்திய வம்சாவளியைச் சேர்ந்த பெண் என்ற பெருமையை அடைவார். இதுகுறித்து அருணா கூறும்போது, ‘‘தேர்தலில் நிச்சயம் வெற்றி பெறுவேன்’’ என்று நம்பிக்கை தெரிவித்துள்ளார். ஏற்கெனவே, நாடாளுமன்ற கீழ்சபையில் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த பிரமிளா ஜெயபால் என்பவர் எம்.பி.யாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.

 

Leave a comment

Your email address will not be published.