அயோத்தியில் பிரச்சினைக்குரிய இடத்தில் ராமர் கோயிலில் வழிபாடு நடத்துவது தனது அடிப்படை உரிமை என்றும் இது தொடர்பாக தான் தாக்கல் செய்த மனுவை அவசர வழக்காக விசாரிக்க வேண்டும் என்றும் உச்ச நீதிமன்றத்தில் சுப்பிரமணியன் சுவாமி கோரிக்கை விடுத்திருந்தார்.
இந்த மனு நேற்று விசாரணைக்கு வந்தது. தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா, நீதிபதிகள் ஏ.எம்.கன்வில்கர், டி.ஒய்.சந்திரசூட் ஆகியோர் கொண்ட அமர்வு மனுவை பரிசீலித்தது. இதை அவசர வழக்காக விசாரிக்க முடியாது என்று கூறிய நீதிபதிகள், இதுபற்றி பின்னர் விசாரிக்கப்படும் என்று தெரிவித்தனர். அதற்கு, ‘பின்னர்’ என்பது தெளிவாக இல்லை என்றும் 15 நாட்களுக்குப் பிறகு விசாரிக்க வேண்டும் என்று சுப்பிரமணியன் சுவாமி வலியுறுத்தினார்.