அரசு பள்ளிகளில் தற்காலிக ஆசிரியர்களாக 2449 பேர் நியமனம் – பள்ளிக் கல்வித்துறை.

அரசு பள்ளிகளில் தற்காலிக ஆசிரியர்களாக 2449 பேர் நியமனம் – பள்ளிக் கல்வித்துறை.

அரசுப்பள்ளிகளில் 11, 12-ஆம் வகுப்புகளுக்கு ஆசிரியர் பற்றாக்குறை இருந்து வருகிறது. அதை சரிசெய்ய தற்காலிக ஆசிரியர்களை நியமனம் செய்ய பள்ளிக் கல்வித்துறை முடிவெடுத்துள்ளது.

ஆசிரியர் தகுதித்தேர்வு மூலம் தேர்வு செய்ய காலதாமதம் ஆகும் என்பதால் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக பள்ளிக் கல்வித்துறை அறிவித்துள்ளது.

தமிழகம் முழுதும் 2449 முதுகலை பட்டதாரிகளை பெற்றோர் ஆசிரியர் கழகம் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள். இவர்களை தேர்வு செய்ய தலைமை ஆசிரியர், உதவி தலைமை ஆசிரியர் மற்றும் 3 ஆசிரியர்கள் கொண்ட குழு அந்தந்த பள்ளிகளில் நியமிக்கப்படும்.

தற்காலிக ஆசிரியர்களுக்கு மாதம் 10 ஆயிரம் ஊதியம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. மொத்தம் 11 பாடங்களுக்கு ஆசிரியர் நியமிக்கப்படவுள்ளனர். இவர்கள் ஆகஸ்ட் முதல் டிசம்பர் வரை 5 மாதங்களுக்கு பணியில் இருப்பர் என்று பள்ளிக் கல்வித்துறை அறிவிப்பு வெளியிட்டுள்ளது.🛑