ஆச்சிமிளகாய்த்தூள் – பூச்சி கொல்லி பொடி ஆனதால்… கேரளத்தில் #தடை !!! தமிழகத்தில் தாராளம் !!

ஆச்சிமிளகாய்த்தூள் – பூச்சி கொல்லி பொடி ஆனதால்… கேரளத்தில் #தடை !!!
தமிழகத்தில் தாராளம் !!!

#பூச்சிக்கொல்லி மருந்து அதிக அளவில் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டதை அடுத்து தமிழகத்தைச் சேர்ந்த ஆச்சி மசாலா நிறுவனத்தின் மிளகாய் பொடிக்கு #கேரளாவில் தடை விதிக்கப்பட்டுள்ளது !!!

#தமிழகத்தைச் சேர்ந்த ஆச்சி மசாலா தூள் தயாரிப்பு நிறுவனம் கேரளாவிலும் தங்கள் தயாரிப்புகளை விற்பனை செய்து வருகிறது. திருச்சூரில் இந்த நிறுவனத்தின் மசாலாப் பொருட்களை உணவு #பாதுகாப்புத்துறை அதிகாரிகள் கைப்பற்றி கொச்சியில் உள்ள உணவுப் பொருள் பரிசோதனை கூடத்துக்கு அனுப்பி வைத்தனர் !!!

அங்கே நடத்திய ஆய்வில் ஆச்சி மசாலா நிறுவனத்தின் மிளகாய் பொடியில் பூச்சிக்கொல்லி மருந்துகளான #இட்டியோன், ப்ரொபெனொபோஸ் ஆகியவற்றின் அளவு அதிகமாக இருப்பது கண்டறியப்பட்டது !!!

இதையடுத்து அவர்கள் அளித்த அறிக்கையின் அடிப்படையில் ஆச்சி மசாலா மிளகாய்ப் பொடிக்கு தடைவிதித்து கேரள #உணவுபாதுகாப்புத் துறை ஆணையர் உத்தரவு பிறப்பித்துள்ளார். கேரளத்தின் உணவுப் பாதுகாப்புத் தர நிர்ணய சட்டம் 2006ன் கீழ் இந்த நடவடிக்கை எடுக்கப் பட்டதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

ஆச்சி மசாலா மிளகாய்த் தூள், கட்ட மிளகாப் பொடி என்று தமிழகத்தில் அதிகம் பேரால் பயன்படுத்தப்பட்டு வருகிறது! கேரளத்தில் தடை செய்யப் பட்டுள்ள அதே பூச்சிகொல்லி மருந்து நிறைந்த மிளகாய்பொடியை தான் #தமிழர்கள் வாங்கி பயன்படுத்தி வருகின்றனர்🔴