ஆபத்தான நிலையில் இருக்கும் இந்தியாவின் 7 வங்கிகள்!

🌍ஆபத்தான நிலையில் இருக்கும்
இந்தியாவின் 7 வங்கிகள்!

இந்தியாவில் ஆட்டோமொபைல், டெக்ஸ்டைல், ஐடி துறைகள் ஏற்கெனவே பாதிப்புகளைச் சந்தித்து வரும் நிலையில், நாட்டின் பொருளாதாரம் என்ன ஆகும்? என்பது எல்லோருக்குமே கேள்விக்குறியாக உள்ளது.

இந்நிலையில் பொருளாதாரத்தின் முதுகெலும்பாக விளங்கும் வங்கித் துறையும், இந்தியாவில் மிகவும் மோசமான நிலையில் இருப்பதாக ‘புளூம்பெர்க்’ (Bloomberg) நிதி நிறுவனம் தெரிவித்துள்ளது.

உலகிலேயே படுமோசமாக இயங்கும் முதல் 10 வங்கிகளின் பட்டியலில், 7 வங்கிகள்இந்திய வங்கிகள் என்று ‘புளூம்பெர்க்’ கூறியுள்ளது.

“இந்திய வங்கிகள் தற்போது கடுமையான வராக்கடன் பிரச்சனையைச் சந்தித்துவருகின்றன. அதுமட்டுமல்லாமல் கொடுத்தகடனை துரிதமாக திரும்பப் பெறுவதற்கான சாத்தியக்கூறே இல்லாத அளவிற்கு நாட்டின் வர்த்தக வளர்ச்சி உள்ளது. இதனால் இந்திய வங்கிகளின் எதிர்காலம் கவலைக்கிடமாக உள்ளது.🌐 👇🏾
👆🏽இந்திய பொருளாதார வளர்ச்சி மந்தமாக இருக்கும் காரணத்தால் வங்கிகளின் சொத்து மதிப்பு தொடர்ந்து குறைந்து வருவது மட்டும் அல்லாமல் புதிய நிதி திரட்டும் முயற்சிகளையும் எடுக்க முடியாத நிலை ஏற்பட்டுள் ளது” என்று ‘புளூம்பெர்க்’ தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.

புளூம்பெர்க் குறிப்பிட்டுள்ள, மோசமான நிலையிலுள்ள இந்திய வங்கிகளின் பட்டியலில், ‘யெஸ் வங்கி’, ‘ஐடிபிஐ வங்கி’, ‘சென்ட்ரல்பாங்க் ஆப் இந்தியா’, ‘பாங்க் ஆப் இந்தியா’,‘ஆர்பிஎல் பாங்க் லிமிடெட்’, ‘இந்தியன் ஓவர்சீஸ் வங்கி’, ‘கார்ப்பரேஷன் வங்கி, ‘ஓரியெண்டல் பாங்க் ஆப் காமர்ஸ்’ உள்ளிட்டவைஇடம்பெற்றுள்ளன

.இதில், ‘யெஸ்’ வங்கியின் பங்குகள் மட்டும் இந்த வருடம் சுமார் 70 சதவிகிதமும், ஐடிபிஐவங்கி பங்குகள் சுமார் 60 சதவிகிதம் வரையிலும் சரிவைச் சந்தித்துள்ளது.🌐