ஆப்கானிஸ்தானில் தற்கொலைப்படை தாக்குதலில் 19 பேர் உயிரிழப்பு…

காபுல்: ஆப்கானிஸ்தானில் நடைபெற்ற தற்கொலைப்படை தாக்குதலில் இந்துக்கள், சீக்கியர்கள் உள்பட 19 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஆப்கானிஸ்தானின் கிழக்கு பகுதியில் உள்ள நன்கர்ஹர் மாகாணத்தின் தலைநகரான ஜலாலாபாத் என்னும் இடத்தில் நடைபெற்ற அரசு நிகழ்ச்சியில் அதிபர் அஷ்ரப் கானி பங்கேற்றார். இந்நிகழ்ச்சியின் போது நடத்தப்பட்ட தற்கொலைப்படை தாக்குதலில் 19பேர் உயிரிழந்தனர் 20க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்துள்ளனர்.

சீக்கியர்கள் மற்றும் இந்துக்களை குறிவைத்து இந்த தாக்குதல் நடைபெற்றுள்ளது. இந்த தாக்குதலுக்கு ஐஎஸ் தீவிரவாத அமைப்பு பொறுப்பேற்றுள்ளது. இதற்கிடையே, ஆப்கானிஸ்தானில் சீக்கியர்கள், இந்துக்களை குறிவைத்து நடைபெற்ற தற்கொலைப்படை தாக்குதலுக்கு பல்வேறு தரப்பினர் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

இதுதொடர்பாக காபுலில் உள்ள இந்திய தூதரகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், ஜலாலாபாத் நகரில் சீக்கியர்கள் மற்றும் இந்துக்கள் மீது நடத்தப்பட்ட தற்கொலைப்படை தாக்குதலுக்கு கடும் கண்டனத்தை தெரிவித்துள்ளது. இந்த தாக்குதல் கொடூரமானது மற்றும் கோழைத்தனமானது. இந்த தாக்குதலில் பலியானவர்களின் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்வதாக அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

8 comments

Leave a comment

Your email address will not be published.