ஆப்கானிஸ்தானுக்கு எதிரான ஒரேயொரு டெஸ்ட் போட்டியில் ஷிகர் தவான் சதம் பூர்த்தி செய்துள்ளார்.
பெங்களூரு,

ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்று பயணம் மேற்கொண்டு ஒரே ஒரு டெஸ்ட் போட்டியில் விளையாடுகிறது. இந்தியா-ஆப்கானிஸ்தான் அணிகள் இடையிலான இந்த டெஸ்ட் போட்டி பெங்களூருவில் உள்ள சின்னசாமி ஸ்டேடியத்தில் இன்று தொடங்கியது. இதில் டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங் தேர்வு செய்தது. இதனை தொடர்ந்து இந்திய அணியின் முரளி விஜய் மற்றும் ஷிகர் தவான் விளையாட தொடங்கினர். தொடக்கத்தில் இருந்து தவான் அடித்து ஆட தொடங்கினார். அவரது ஆட்டத்தில் பவுண்டரிகளும், சிக்சர்களும் பறந்தன.
25 ஓவர்கள் முடிவில் 96 ரன்கள் எடுத்திருந்த ஷிகர் தவான் 26 ஓவர்கள் முடிவில் 2 பவுண்டரிகளை அடித்து 88 பந்துகளில் 104 ரன்கள் எடுத்துள்ளார். இதில் 3 சிக்சர்கள், 19 பவுண்டரிகள் அடங்கும்.
டெஸ்ட் போட்டி ஒன்றில் முதல் நாள் ஆட்டத்தில் உணவு இடைவேளைக்கு முன் இதுவரை எந்த இந்தியரும் சதம் அடித்தது இல்லை என்ற நிலையில் தவான் இந்த சாதனையை படைத்துள்ளார்.
இந்திய அணி உணவு இடைவேளை வரை விக்கெட் இழப்பின்றி 27 ஓவர்களில் 158 ரன்கள் எடுத்து உள்ளது.