ஆப்கானிஸ்தான் – தற்கொலை படையினர் நடத்திய தாக்குதலில் 8 பேர் பலி

காபுல்:
ஆப்கானிஸ்தான் நாட்டின் கிழக்குப் பகுதியில் அமைந்துள்ளது குணார் மாகாணம். இங்குள்ள காவல் நிலைய சோதனைக்கு வெளியே தற்கொலைப்படை பயங்கரவாதிகள் திடீர் வெடிகுண்டு தாக்குதல் நடத்தினர்.
இந்த வெடிகுண்டு தாக்குதலில் 8 பேர் சம்பவ இடத்திலேயே உடல் சிதறி பரிதாபமாக இறந்தனர். இந்த தாக்குதலில் பலியானவர்கள் குறித்த விவரம் தெரியவில்லை. மேலும், 4 பேர் படுகாயம் அடைந்தனர்.
இதையடுத்து, அங்கு விரைந்து சென்ற போலீசார் காயம் அடைந்தவர்களை மீட்டு அருகிலுள்ள மருத்துவமனையில் சேர்த்து சிகிச்சை அளித்து வருகின்றனர்.

Leave a comment

Your email address will not be published.