தங்கள் ஆட்சியைப் பற்றி அநியாயமாக விமர்சனம் செய்வதால், ஆர்ட்டிகள் 15 என்ற இந்தி படத்தை தடை செய்யவேண்டும் என்று பா.ஜ.க. போராடி வருகிறது. அப்படி அந்தப் படத்தில் என்ன இருக்கிறது?
உத்தரப்பிரதேசத்தில் அயோத்திக்கு அருகில் இருக்கும் ஒரு கிராமத்தில், தினக்கூலி பார்க்கும் மூன்று தலித் சிறுமிகள் மூன்று ரூபாய் சம்பளம் உயர்த்திக் கேட்டதற்காக, 2 சிறுமிகள் கூட்டாக வன்புணர்வு செய்து கொல்லப்படுகிறார்கள். ஒருத்தியைக் காணவில்லை.
இந்த விவகாரத்தை துப்புதுலக்க ஆரம்பிக்கிறான் பிராமண காவல்துறை அதிகாரி ஒருவன். ஆனால், அரசு அமைப்பும், சமூகச் சூழலும் பெரும் தடைக்கல்லாக உயர்ந்து நிற்கின்றன. இதைத் தாண்டி அவனால் என்ன செய்ய முடிகிறது என்பதுதான் படம்.
இது பா.ஜ.கவுக்கு எதிரான படமல்ல. மாறாக, உத்தரப்பிரதேசத்தின் நிஜமான சூழலை இந்தியாவுக்கு முன்வைக்கும் திரைப்படம். அயோத்தியைச் சுற்றி நிலவும் மடாதிபதிகளின் ஆதிக்கம், அவர்களின் அரசியல், தலித்தகளை வைக்கவேண்டிய இடத்தில் வைக்க நினைக்கும் ளிஙிசிக்கள், அவர்களுக்கு ஆதரவான அரசுக் கட்டமைப்பு என விரியும் இந்தத் திரைப்படம், பார்ப்பவர்களை நடுங்க வைக்கிறது.
படத்தின் ஒவ்வொரு வசனமும் அட்டகாசமானவை. ஆனால், 👇🏾
வில்லனாக ஒருவரை நிறுத்தி சவால் விடுபவையல்ல. மாறாக படம் பார்ப்பவர்களின் மனசாட்சியை நிறுத்தி கேள்வியெழுப்புபவை. மிஸ் பண்ணக்கூடாத படம் இது.
இந்தப் படம் நிகழும் மாநிலத்தைப்போல தமிழ்நாட்டையும் மாற்ற நினைக்கின்றன சில சக்திகள் என்பதை மனதில் வைத்துப் பார்த்தால் படம் இன்னும் திகிலாக இருக்கும். தன்னுடைய கட்சி அம்பலமாகிவிடக் கூடாது என்பதற்காகவே தடை போட முயற்சிக்கிறது பா.ஜ.க. சீக்கிரம் பாத்துடுங்க பாஸ்