இந்தியாவில் சுற்றுப் பய ணம் மேற்கொண்டுள்ள ரஷ்யாவைச் சேர்ந்த 15-க்கும் மேற்பட்ட நடனக் கலைஞர்கள் இசையமைப்பாளர் இளையராஜாவை நேற்று நேரில் சந்தித்து, அவருக்கு பிறந்தநாள் வாழ்த்து கூறினர். இந்திய – ரஷ்ய வர்த்தக சபை ஏற்பாடு செய்த இந்த நிகழ்ச்சியில், அவர்கள் இளையராஜா இசையமைத்த பாடல்களைப் பாடி நடனம் ஆடினர். ரஷ்யாவின் புகழ்பெற்ற ‘சமோவர்’ கோப்பையை அவருக்கு பரிசாக வழங்கினர்.
அப்போது அவர்களிடம் பேசிய இளையராஜா, ‘‘இசையாலும், கலையாலும்தான் மக்கள் மனதில் அமைதியை ஏற்படுத்த முடியும். மக்களின் மனதைப் பண்படுத்த முடியும். வன்முறையை நோக்கிப் போகும் உலகத்தை நல்ல முறையை நோக்கி திசை திருப்ப முடியும் என உறுதி யாக கூறுகிறேன்’’ என்றார்.