Home செய்திகள் அரசியல் இடைத்தேர்தலில் வெற்றி பெற்ற அதிமுக எம்எல்ஏக்கள் பதவியேற்றனர்!

இடைத்தேர்தலில் வெற்றி பெற்ற அதிமுக எம்எல்ஏக்கள் பதவியேற்றனர்!

127

சென்னை: தமிழக சட்டசபையில் அதிமுக எம்எல்ஏக்கள் 9 பேர் இன்று முறைப்படி பதவியேற்றனர். தமிழகத்தில் 38 நாடாளுமன்ற தொகுதி தேர்தலும் 18 சட்டசபை தொகுதிகளுக்கான இடைத்தேர்தலும் கடந்த ஏப்ரல் மாதம் 18ஆம் தேதி நடைபெற்றது. இதைத்தொடர்ந்து எஞ்சிய 4 சட்டசபை தொகுதிகளுக்கு கடந்த 19ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெற்றது. 9 தொகுதிகளில் வெற்றி பெற்ற அதிமுக எம்எல்ஏக்கள் இன்று பதவி ஏற்றனர். அவர்களுக்கு சட்டசபையில் சபாநாயகர் தனபால் முறைப்படி பதவி பிரமாணம் செய்து வைத்தார்.