வோடபோனின் வாடிக்கையாளர்களுக்கான 56 நாட்கள் திட்டம்.. முழு விபரம் உள்ளே!

வோடபோன் நிறுவனம் தனது ப்ரிபேய்டு வாடிக்கையாளர்களுக்காக மேலும் ஒரு புதிய வகை ரீசார்ஜ் பேக்கை அறிமுகப்படுத்ததியுள்ளது. முதல் ரீசார்ஜ் பேக், 351 ரூபாய்க்கு அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதுஇந்த பேக் 56 நாட்கள் வேலிடிட்டியுடன் வெளியாகியுள்ளது.

மெசேஜ்க்ள் மற்றும் கால்கள் வசதி பெரும் இந்த பேக் மூலம் டேட்டா கிடைக்காது. மேலும் இந்தத் திட்டத்தை வோடபோன்தனது புதிய வாடிக்கையாளர்களுக்கு மட்டுமே அறிமுகப்படுத்தியுள்ளது

இந்த ஆஃபர் சரியாக எப்போது தொடங்கப்பட்டது என இன்னும் தெரியாமல் இருக்கும் நிலையில் சிலர் இது டிசெம்பர் 2018 முதல் பயன்பாட்டில் இருப்பதாக தெரிவிக்கின்றனர். இந்த அருமையான ப்ரிபேய்டு திட்டத்தில் டேட்டா இல்லாதது மட்டுமே குறையாக உள்ளது.

அதேபோல, ரூபாய் 176 ரீசார்ஜ் செய்தால் 28 நாட்கள் வேலிடிட்டி, நாள் ஓன்றுக்கு 1ஜிபி டேட்டா மற்றும் 100 எஸ்எம்எஸ்களை அனுப்பும் வசதியும் பெற்றுள்ளது. மேலும் இதுபோல ரூபாய் 496 மற்றும் 555 க்கு ரீசார்ஜ் செய்வதன் மூலம் நாள் ஓன்றுக்கு வரம்பற்ற கால்கள், 1.4 ஜிபி டேட்டா, 100 எஸ்எம்எஸ்களை அனுப்ப முடிகிறது. இந்தத் திட்டம் 84 நாட்கள் மட்டும் 90 நாட்கள் பேக்கில் வந்துள்ளது.

சில நாட்களுக்கு முன்னர் அறிமுகமான 1,999 ரூபாய்கான திட்டத்தில் 1.5 ஜிபி (4ஜி/3ஜி) டேட்டா மற்றும் வரம்பற்ற கால்கள், 365 நாட்களுக்கு பயன்படுத்திக்கொள்ள முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a comment

Your email address will not be published.