இதுதான் உண்மையான நட்பு’ என நெட்டிசன்கள் பாராட்டி வருகின்றனர்.

கேரள மாநிலம் திருச்சூர் அருகே உள்ளது புல்லூட். இங்குள்ள அரசுக் கல்லூரியில் சில மாதங்களுக்கு முன்பு 1992-94 கல்வி ஆண்டைச்  சேர்ந்த முன்னாள் மாணவர்கள் சந்தித்துள்ளனர். அனைவரும் தவறாமல் பங்கேற்ற அந்த நிகழ்வில் ஜெஸ்ஸி பிஜு என்ற ஒரு பெண்மணி மட்டும் மிஸ்ஸிங். அவர் ஏன் வரவில்லை; எங்கே இருக்கிறார் என எந்த நண்பருக்கும் தெரியவில்லை. இதனால் மொத்த நண்பர்களும் அவரைத் தேடி களத்தில் இறங்கினர். கிடைத்த தகவலைக் கொண்டு தேடுதலில் இறங்கியவர்கள் கடைசியில் திருச்சூர் அருகே தனிச்செரி பகுதியில் ஜெஸ்ஸி இருப்பது தெரியவர நண்பர்கள் அவரைத் தேடிச் சென்றுள்ளனர். அவரைச் சந்திக்கும்போதுதான் அவரது நிலை என்னவென தெரியவந்துள்ளது. இருக்க வீடு இல்லாமல் சிறிய இடத்தில் ஏழ்மை நிலையில் வசித்து வந்துள்ளார் ஜெஸ்ஸி. ஏழ்மை நிலையால்தான் அவரால் நண்பர்களைச் சந்திக்க முடியவில்லை என்ற விவரமும் தெரியவர வருந்தியுள்ளனர் நண்பர்கள். வெறும் வருத்தத்தோடு நின்றுவிடாமல் ஜெஸ்ஸிக்கு உதவ முடிவெடுத்த நண்பர்கள் அவரின் நிலை குறித்து தங்களின் மற்ற நண்பர்களுக்கும் வாட்ஸ்அப் உள்ளிட்ட சமூக வலைதளங்களின் மூலம் தெரியப்படுத்தியுள்ளனர்.

இதன்பிறகுதான் ஜெஸ்ஸியின் வாழ்க்கையில் மாற்றம் ஏற்படத் தொடங்கியிருக்கிறது. கல்லூரி நண்பர்கள் அனைவரும் அவருக்கு உதவ முன்வர மொத்தம் 7.5 லட்ச ரூபாய் திரட்டியுள்ளனர். அதைக்கொண்டு ஜெஸ்ஸிக்கு 3.5 சென்ட் நிலத்தில் ஒரு வீடு கட்டிக்கொடுத்துள்ளனர். ஐந்து மாதத்துக்கு முன்பு தொடங்கிய வீடுகட்டும் பணி சமீபத்தில் நிறைவடைந்துள்ளது. இதையடுத்து, அந்தப் பகுதி எம்.எல்.ஏ மற்றும் கல்லூரியின் முதல்வரை வரவழைத்து வீட்டுக்கான சாவியைக் கொடுத்துள்ளனர்.
@ இந்தப் புகைப்படம், செய்திகள் வெளிவர இதுதான் உண்மையான நட்பு’ என நெட்டிசன்கள் பாராட்டி வருகின்றனர்.🌐
Attachments area