இத்தனை அற்புத மருத்துவ குணங்கள் கொண்டதா கொத்தமல்லி

நன்செய், கரிசல்மண், செம்மண், புன்செய் நிலங்களில் எளிதாக வளரக்கூடியதும், குறிப்பாக எல்லாக் கட்டத்திலும் கிடைக்ககூடிய கொத்தமல்லியின் மருத்துவ பயண்கள் குறித்து பார்ப்போம்.

1.கொத்தமல்லியில் லினோலிக் அமிலம், அஸ்கார்பிக் அமிலம் அதிகம் நிறைந்துள்ளதால், இது கொழுப்பின் அளவை பெரிதளவில் குறைக்கும்
2.கொத்தமல்லியை அரைத்து, கண்களுக்கு மேலே பற்று போடுவதால், கண் பிரச்சனைகள் குறைகிறது. மேலும், கண்களுக்கு கீழே உள்ள சுருக்கங்கள், கருவளையங்கள்  ஆகியற்றை இந்த கொத்தமல்லி போக்குகிறது.
3.கொத்தமல்லி இரத்தத்தை சுத்திகரிக்கும் தன்மை கொண்டது.
4.கொத்தமல்லி விதைகளை தனியா தேநீராக்கி குடித்தால், சிறுநீர் உடலில் தேக்கி வைக்கப்படாமல் உடலை விட்டு வெளியேறும்.
5.தனியா தேநீரை பருகுவதினால், வாயு பிரச்சனைகள், அடிக்கடி ஏப்பம் வருவது, நெஞ்செரிச்சல் உண்டாவது போன்றவை குணமாகும்.
6.கொத்தமல்லியை பேஸ்டாக்கி சருமத்திற்கு தடவினால், சரும பிரச்சனைகள் தீரும். தோல் சுருக்கம் மற்றும் கருமை  மறையும்.

Leave a comment

Your email address will not be published.