அந்த லாட்டரி டிக்கெட்டுக்கான குலுக்கல் பரிசாக ரூ.18 கோடி (27.22 லட்சம் டாலர்) இந்தியர் டிக்ஸன் கதிரா ஆபிரஹாமுக்கு கிடைத்துள்ளது என கலீஜ் டைம்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது. இன்று நடைபெற்ற குலுக்கலில் மொத்த 9 பேர் பரிசுகள் பெற்றனர். அதில் 5பேர் இந்தியர்கள், 3 பாகிஸ்தான் நாட்டைச் சேர்ந்தவர்கள், ஒருவர் ஐக்கிய அரபு அமீரகம் நாட்டைச் சேர்ந்தவர்.
அபு தாபி சர்வதேச விமான நிலையத்தில் நீண்டகாலமாக பிக்டிக்கெட் அபு தாபி லாட்டரி குலுக்கல் நடந்து வருகிறது. கடந்த ஏப்ரல் மாதத்தில் கேரளாவைச் சேர்ந்த ஒரு டிரைவர் ஒருவருக்கு 1.20 கோடி திர்ஹாம் பரிசு கிடைத்தது. அதேபோல, ஜனவரி மாதம் ஒரு இந்தியருக்கு 1.20 கோடி திர்ஹாம் பரிசு கிடைத்தது குறிப்பிடத்தக்கது.
கடந்த ஆண்டு அக்டோபர் மாதத்தில் இருந்து அபு தாபி லாட்டரி மூலம் 10 பேர் பரிசுகள் வென்றதில் 8 பேர் இந்தியர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. சராசரியாக ஒவ்வொரு இந்தியரும் 10 லட்சம் திர்ஹாம் பரிசு வென்றுள்ளனர்.