இந்தியர்களுக்கு பாதகமான அமெரிக்க குடியுரிமை மசோதா நாடாளுமன்றத்தில் தோல்வி: அதிபர் டிரம்ப் அதிருப்தி

வாஷிங்டன்: தகுதி அடிப்படையில் வேலை மற்றும் குடியுரிமை வழங்கக்கூடிய அமெரிக்க குடியுரிமை மசோதா நாடாளுமன்றத்தில் தோல்வியடைந்தது. இதனால் அதிபர் டிரம்ப் அதிருப்தி அடைந்தார். அமெரிக்க அதிபர் டிரம்ப் பல்வேறு நிர்வாக சீர்திருத்தங்களை கொண்டு வந்துள்ளார். அமெரிக்காவில் உயர் பதவிகள் அமெரிக்கர்களுக்கே என்ற அடிப்படையில் அவர் குடியுரிமை தொடர்பாக புதிய மசோதாவை கொண்டு வந்தார். இந்த மசோதாவில் இந்தியாவிற்கு மிகவும் பாதகமான அம்சங்கள் இடம் பெற்று இருப்பதாக புகார் எழுந்தன. அமெரிக்க நாடாளுமன்றத்தில் நேற்று இந்த மசோதா அறிமுகம் செய்யப்பட்டது. அப்போது நடந்த குரல் ஓட்டெடுப்பில் மசோதா தோற்கடிக்கப்பட்டது. மசோதாவுக்கு 121 பேர் ஆதரவு தெரிவித்தனர். 301 பேர் எதிர்ப்பு தெரிவித்தனர்.

அதிபர் டிரம்ப்பின் குடியரசு கட்சியினர் அதிகம் உள்ள இந்த சபையில் அவரது நிர்வாகம் கொண்டு வந்த இந்த மசோதா தோல்வி அடைந்தது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. ஏனெனில் ஓட்டுப்பதிவு முன் கூட அதிபர் டிரம்ப் வெளியிட்ட டிவிட்டர் பதிவில் தனது கட்சி எம்பிக்களுக்கு, ‘‘இந்த மசோதாவை ஆதரித்து குடியரசு கட்சி எம்பிக்கள் வாக்களிக்க வேண்டும். இதன் மூலம் கிரீன்கார்டு கேட்டு நீண்டகாலமாக நிலுவையில் இருக்கும் அமெரிக்காவாழ் இந்தியர்கள் பயன் அடைவார்கள். இந்தியா உள்ளிட்ட நாடுகளில் இருந்து தகுதி வாய்ந்தவர்கள் அமெரிக்கா வர வாய்ப்பு உள்ளது’’ என்று குறிப்பிட்டு இருந்தார்.

Leave a comment

Your email address will not be published.