இந்தியாவில் டிஜிட்டல் பண பரிவர்த்தனை மேற்கொள்ள 80 ஆப்ஸ்கள் இருந்தாலும் கூட, இரண்டே இரண்டு ஆப்ஸ்களை கொண்டுள்ள சீனாவுடன் போட்டி போட முடியவில்லை.

இந்தியாவில் டிஜிட்டல் பண பரிவர்த்தனை மேற்கொள்ள 80 ஆப்ஸ்கள் இருந்தாலும் கூட, இரண்டே இரண்டு ஆப்ஸ்களை கொண்டுள்ள சீனாவுடன் போட்டி போட முடியவில்லை. பொதுமக்களும், வர்த்தக நிறுவனங்களும் எளிதான டிஜிட்டல் பரிவர்த்தனையை மேற்கொள்ள யுபிஐ வசதி கொண்டு வரப்பட்டது. இதன் அடிப்படையில், தற்போது இந்தியாவில் பேடிஎம், அமேசான், கூகுள் பே என 80க்கும் மேற்பட்ட டிஜிட்டல் பரிவர்த்தனை ஆப்ஸ்கள் செயல்படுகின்றன. இருந்தும், டிஜிட்டல் பண பரிவர்த்தனையில் சீனாவுடன் இந்தியா போட்டி போட இன்னும் வெகு தூரத்திற்கு செல்ல வேண்டியிருக்கிறது.