இந்தியாவுக்கு சுதந்திரம் கொடுத்தது யார்?
சுதந்திரம் கிடைத்தது யாரால்
என்று கேட்டால்
பல தலைவர்கள் பெயரை சொல்வோம்.
ஆனால் கொடுத்தது யார்?
அவர்தான் கிளமெண்ட்_அட்லீ .
இந்தியர்கள் கேட்பது சரிதான்.
நாம் இந்தியாவிலிருந்து வெளியேறி விடுவோம்.
இந்தியர்கள்தான் இந்தியாவை
ஆள வேண்டும் என்று சொல்லி சுதந்திரத்தை நமக்கு கொடுத்தவர் #அட்லீ.
பிரிட்டன் பிரதமராக இருந்த
வின்ஸ்டன்_சர்ச்சில் இருந்தவரை சுதந்திரம் எட்டாக்கனியாகத்தான் இருந்து.
அவரைப் பொறுத்தவரை
இந்தியாவை
பிரிட்டனால் மட்டுமே ஆளமுடியும்.
இந்தியர்களுக்கு ஒன்றும் தெரியாது. படிப்பறிவு கிடையாது.
அரசியல் கல்வி நாகரீகம் என்றால் என்ன என்று கற்று கொடுத்ததே நாம்.
நாம் செய்த உதவிகளுக்கு
இந்தியர்கள் காலம் காலமாக
நமக்கு நன்றி கடன் செலுத்த வேண்டும்? என்று கர்ஜித்தார். ஆனால்
அட்லீ எல்லா வகையிலும் சர்ச்சிலுக்கு நேர் எதிரானவர்.
அமைதியானவர்.
மென்மையாக பேசுவார். பணிவானவர்.
1928ல் சைமன் கமிஷன் மூலம் இந்தியா வந்த அட்லீ,
இந்தியர்கள் ஏன் பிரிட்டிஷ் ஆட்சியை எதிர்க்கிறார்கள்,,,
அவர்களுடைய தேவை என்ன?
நேரில் துல்லியமாக தெரிந்து கொண்டார்.
பிரிட்டனால்
ஆளப்படுவதற்காக உள்ள நாடு இந்தியா என்று சர்ச்சில் கர்ஜித்தார்.
1945ல் தேர்தல் வந்தது.
சர்ச்சில் தோல்வி.
அட்லீ பிரதமரானார்.
1951 வரை அட்லீ தான் பிரதமர் .
அவருக்கு கிடைத்த ஓரே வாய்ப்பு அதுதான்.
என்ன நடந்தாலும் சரி என்று
1947ம் ஆண்டு அட்லீ இந்தியாவுக்கு சுதந்திரத்தை வழங்கினார்.
இந்தியா மட்டுமன்றி
பர்மாவும் இலங்கையும்
விடுதலை பெறுவதற்கு
அவரே காரணமாக இருந்தார்.
ஆனால்
மறு முறை பிரதமர் சர்ச்சில்தான்.
இடையில் ஒரே ஒருமுறை நமக்காகவே சர்ச்சிலை வரலாறு தோற்கடித்தது.
சர்ச்சிலின் வலிமையான கரங்களிலிருந்து
இந்தியாவை_பறித்து,
சுதந்திரமாக தவழவிட்டவர் அட்லீதான்.
சுதந்திரம் வலுவானது.
ஆயிரம் சர்ச்சில் வந்தாலும்
தடுத்து நிறுத்த முடியாது என்று கூறியவர் அட்லீ.வரலாற்று நாயகன்.
முன்னோர்கள்
பாடுபட்டு பெற்ற சுதந்திரத்தை
உணர்வோம்…. காப்போம்…. முன்னேறுவோம்….!
JaiHind… வந்தேமாதரம்.. .🇮🇳