இந்தியா – அமெரிக்கா இடையே பாதுகாப்பு, வெளியுறவு அமைச்சர்களின் பேச்சுவார்த்தை 3வது முறையாக ஒத்திவைப்பு

வாஷிங்க்டன் : இந்திய பாதுகாப்பு மற்றும் வெளியுறவுத் துறை அமைச்சர்களுடன் நடைபெற இருந்த பேச்சுவார்த்தையை 3வது முறையாக அமெரிக்கா ஒத்திவைப்பு  செய்துள்ளது. தவிர்க்க முடியாத காரணங்களால் இந்த பேச்சுவார்த்தையை ஒத்திவைத்துள்ளதாக அமெரிக்கா வெளியுறவுத் துறை தெரிவித்துள்ளது.

இந்தியா – அமெரிக்கா இடையேயான பாதுகாப்புத்துறை மற்றும் வெளியுறவுத் துறை அமைச்சர்களின் பேச்சுவார்த்தை கடந்த ஏப்ரல் மாதம் நடைபெற இருந்த நிலையில், அதிபர் ட்ரம்ப் தமது அமைச்சர் ரெக்ஸ் டெல்லசனை நீக்கியதால் தடைப்பட்டது. இதனையடுத்து ஜூலை 6ம் தேதி இரு நாட்டு அமைச்சர்களின் பேச்சுவார்த்தை வாஷிங்டனில் நடைபெறும் என அமெரிக்கா அறிவித்திருந்தது. இந்த சூழலில் ஈரானில் இருந்து இந்தியாவுக்கு கச்சா எண்ணெய் இறக்குமதி செய்வது உள்ளிட்ட பல பிரச்சனைகளால் அமெரிக்கா அதிருப்தி அடைந்துள்ளது.

இதனால் இந்தியா உடன் நடைபெற இருந்த பேச்சுவார்த்தையை தவிர்க்க முடியாத காரணங்களால் ஒத்திவைப்பு செய்வதாக வெளியுறவுத் துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜை தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு அமெரிக்கா செயலர் மைக் போம்போ வருத்தம் தெரிவித்துள்ளார். புதிதாக வேறு தேதியை முடிவு செய்ய இரு நாடுகளும் ஒப்புக் கொண்டுள்ளதாக வெளியுறவுத் துறை செய்தி தொடர்பாளர் ரவீஷ் குமார் தெரிவித்துள்ளார்.முன்னதாக நேற்றைய தினம் இந்தியாவில் இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு 100% வரி விதிக்க முடிவு எடுத்திருப்பதாக அமெரிக்கா அதிபர் டொனால்டு ட்ரம்ப் அதிரடியாக அறிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

1 comment

  1. Pingback: NKSFB

Leave a comment

Your email address will not be published.