இந்திய அரசுக்கு எதிரான போராட்டத்தில் பெண்கள், குழந்தைகள் உள்பட ஆயிரக்கணக்கானவர்கள் கலந்துகொண்டனர்.

ஆகஸ்ட் 9, வெள்ளிக்கிழமை நடந்த இந்திய அரசுக்கு எதிரான போராட்டத்தில் பெண்கள், குழந்தைகள் உள்பட ஆயிரக்கணக்கானவர்கள் கலந்துகொண்டனர். சௌரா பகுதிக்கு பிபிசி குழு இன்று சென்றபோது தெருக்கள் எங்கும் தடுப்புகள் அமைக்கப்பட்டிருந்தன. அவை நீக்கப்பட்டால் பெரும் அளவில் கூட்டம் கூடலாம் என்று பாதுகாப்பு படையினர் கருதினார்கள். போராட்டக்காரர்கள் முக்கியச் சாலைக்கு வந்துவிட்டால் சட்டம் ஒழுங்கு நிலைமையைக் கையாள்வது கடினம் என்று அவர்கள் கருதினார்கள். பேரணிக்கு பிறகு காஷ்மீர் விடுதலை குறித்த பாடல்கள் தர்காவின் ஒலிபெருக்கிகளில் கேட்க முடிந்தது. இந்திய அரசிடம் தங்கள் உரிமையையே தாங்கள் திரும்பக் கேட்பதாக பேரணியில் கலந்துகொண்ட ஒருவர் பிபிசியிடம் தெரிவித்தார். சட்டப்பிரிவு 370ஐ நீக்கியதன்மூலம் காஷ்மீரை இந்திய அரசு ஒரு போர்க்களமாக மாற்றியுள்ளது “நாங்கள் இந்தியாவுடனும் இருக்க விரும்பவில்லை; பாகிஸ்தான் உடன் இருக்கவும் விரும்பவில்லை; எங்களுக்குத் தேவை சுதந்திர காஷ்மீர்.” – போராட்டத்தில் அகலந்து கொண்ட பெண்