கடந்த தேர்தல் பிரசாரத்தின் போது டிரம்ப் ஆப்கானிஸ்தானில் உள்ள அமெரிக்கப்படைகள் விலக்கிக்கொள்ளப்படும் என்றார். இப்போது அமெரிக்கா அடுத்த அதிபர் தேர்தலுக்குத் தயாராகிவிட்டது. இன்னும், ஆப்கானிஸ்தானில் அமைதி ஏற்படவில்லை. அமெரிக்கா தனது தோல்வியை மறைக்க வேண்டும். அதற்கு பாகிஸ்தானிடம் பொறுப்பைக்கொடுத்துவிட்டு மெதுவாக இடத்தைக் காலி செய்கிறது அமெரிக்கா. இதற்குத்தானே ஆசைப்பட்டோம் என்று காத்திருந்த பாகிஸ்தான் இப்போது பெருமகிழ்ச்சியில் திளைக்கிறது.
ஆப்கானிஸ்தானின் வளர்ச்சியில் இந்தியாவின் பங்கு கணிசமானது, அங்கு இந்தியாவின் பலம் அதிகரித்துவரும் சூழலில் தற்போது பாகிஸ்தானிடம் மறைமுகமாக பொறுப்பைக் கொடுத்திருப்பது இந்தியாவின் தோல்வியாகக் கருதப்படுகிறது. ஆப்கானிஸ்தானில் உள்ள தாலிபான்களின் உதவியுடன் இந்தியாவைத் தாக்க பாகிஸ்தான் முயற்சி செய்யும். ஆனால், தாக்குதல்களில் தனக்குச் சம்பந்தம் இல்லை என கை விரித்துவிடும். இது இந்தியாவின் வெளிநாட்டுக் கொள்கையில் ஏற்பட்ட மாபெரும் தோல்வியாகக் கருதப்படுகிறது. இந்தத் தோல்வி ஒரு பக்கம் என்றால், இந்திய தொழில்துறை பெரும் தேக்கநிலையில் இருக்கிறது. பொருளாதாரம் மந்த கதியில் மயங்கி ்கிடக்கிறது.
இந்திய தொழில்துறை பெரும் தேக்கநிலையில் இருக்கிறது. பொருளாதாரம் மந்த கதியில் மயங்கி ்கிடக்கிறது.
