இந்திய வானிலை ஆய்வு மையம் மழை குறித்து இன்று பல்வேறு மாநிலங்களிளுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது.

அடுத்த வாரம் தமிழகம், புதுச்சேரியில் கனமழைக்கு வாய்ப்பிருப்பதாக இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது இந்திய வானிலை ஆய்வு மையம் மழை குறித்து இன்று பல்வேறு மாநிலங்களிளுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது.

தமிழகத்திற்கு வெளியிட்ட அறிவிப்பில், மத்திய மேற்கு வங்கக் கடலிலும், அதை ஒட்டிய தென்மேற்கு வங்கக் கடலிலும் நிலவும் வளிமண்டல சுழற்சி, தெற்கு ஆந்திர கடலோரப் பகுதி வரை நீடிக்கிறது.மேலும் கிழக்கு மத்திய வங்கக் கடல் மற்றும் அதை ஒட்டிய பகுதிகளில் வரும் 24ஆம் தேதி புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்பு இருக்கிறது. இதன் காரணமாக. அடுத்த வாரம் தமிழகம், புதுச்சேரி மாநிலங்களில் ஆங்காங்கே கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது என தெரவிக்கப்பட்டுள்ளது. மத்திய மேற்கு மற்றும் தென்மேற்கு அரபிக் கடலில் மணிக்கு 40 முதல் 50 கிலோமீட்டர் வேகத்தில் பலத்த காற்று வீசும் என்பதால் அந்த பகுதிகளுக்கு மீனவர்கள் செல்ல வேண்டாம் என்றும் இந்திய வானிலை மையம் அறிவுறுத்தியுள்ளது. இதனிடையே சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், அடுத்த 24 மணி நேரத்தில் தமிழகம் மற்றும் புதுவையில் அநேக இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது என தெரிவித்துள்ளது. மும்பையில் இன்று மிக அதிகனமழை பெய்யும்… எச்சரித்த இந்திய வானிலை.. பள்ளிகளுக்கு லீவு கடந்த 24 மணிநேரத்தை பொறுத்தவரையில், சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், திருவண்ணாமலை உள்பட வட தமிழகத்தில் நேற்றிரவு பலத்த மழை பெய்தது. குறிப்பாக திருவள்ளூர் மற்றும் சென்னை மாவட்டங்களில் விடிய விடிய கனமழை பெய்தது. திருவள்ளூரில் ஒரே நாளில் 21 செ.மீ மழை பெய்துள்ளது. பூண்டியில் 20 செ.மீ மழையும் , திருத்தணி மற்றும் தாமரைப்பாக்கத்தில் 15 செ.மீ மழையும், சோழவரத்தில் 13 செ.மீ மழையும், திருவிலாங்காட்டில் 12 செ.மீ மழையும், பள்ளிப்பட்டு, ஆர்கே பேட்டை மற்றும் கும்மிடிப்பூண்டியில் தலா 10 செ.மீ மழை செய்துள்ளது.சென்னை மீனம்பாக்கத்தில் 6 செ.மீ மழையும், கிண்டியில் 36.செ.மீ மழையும். கொளப்பாக்கத்தில் 3.6 செ.மீ மழையும் பெய்துள்ளது.