இனிமேல் பூட்டுக்கு சாவி தேவை இல்லை.வந்தாச்சு டிஜிட்டல் பூட்டு.!!

இனிமேல் பூட்டுக்கு சாவி தேவை இல்லை.வந்தாச்சு டிஜிட்டல் பூட்டு.!!

ஒவ்வொரு வீட்டிற்கும், தேவையான விஷயங்களில் மிக முக்கியமானது பூட்டு தான். நமது வீட்டின் மொத்த பாதுகாப்பையும் உறுதி செய்வது இந்த பூட்டுக்கள் தான் பூட்டிற்கு பெயர் போன ஊர் எது❓ திண்டுக்கல் தான்.

அங்கே, பூட்டு உற்பத்தி செய்வது மிக முக்கிய தொழிலாக கருதப்படுகிறது. சமீபத்தில்தான் திண்டுக்கல் பூட்டுக்கு புவிசார் குறியீடு வழங்கப்பட்டது. தற்போது பல வகையான பூட்டுக்கள் இருக்கின்றது. நாம் டிஜிட்டல் உலகத்தில் வாழுகின்றோம்.

அந்த வகையில் போதிலும் டிஜிட்டல் முறையை கொண்டு வர லெனோவோ நிறுவனம் தற்போது முயற்சி செய்துள்ளது. இந்த டிஜிட்டல் பூட்டுகளை திறக்கவும், பூட்டவும் சாவிகள் வேண்டாம். கையை வைத்தால் மட்டும் போதும் பூட்டிக் கொள்ளும்.
அது போல்,கைவிரல்களை அதற்கென கொடுக்கப்பட்டுள்ள இடத்தில் அழுத்தினால் பூட்டு தானாக திறந்து கொள்ளும்.ஒரே பூட்டில் சுமார் மூன்று முதல், பத்து பேர் வரை தங்களுடைய கைரேகையை அதில் பதிவு செய்து திறந்து கொள்ளலாம் என்பது இதில் உள்ள கூடுதல் வசதி.
தற்போது லெனோவோ நிறுவனம் வெளியிட்டுள்ள இந்த டிஜிட்டல் பூட்டு மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்று உள்ளது.🌐