இன்னைக்கு ட்ரென்ட்டே மொபைல் கேமிராவில் இருக்கற பிக்ஸல் அளவு தான்.

போட்டி போட்டுகிட்டு மொபைல் நிறுவனங்கள் தங்களது மொபைல் தயாரிப்புகளில் கேமராவின் தரத்தை பலப்படுத்துகின்றன. இன்னைக்கு ட்ரென்ட்டே மொபைல் கேமிராவில் இருக்கற பிக்ஸல் அளவு தான். சமீபத்தில் பிரபல பிராண்டுகளின் ஆன்ட்ராய்டு மொபைல்களில் 48 mp திறன் கொண்ட கேமிராக்கள் ஃபோட்டோக்களின் பிக்சல்களை துல்லியமாக காட்டுகின்றது. இது நாம எடுக்கற ஃபோட்டோக்களின்  தர மேம்பாட்டிற்காக பயன்படுத்திக்கொள்ளலாம், இதில் பெரிசா எந்த ஆபத்தும் இல்லை.

தொலை தூரத்தில் இருக்கும் காட்சிகளை, நபர்களை அருகில் கொண்டு வந்து கொடுக்கும் லென்சுகளை பயன்படுத்தும்போது அதில் மற்றவர்களுக்கு தேவையற்ற ஆபத்தும்  இருக்கின்றது. 2x, 4x என்பதெல்லாம் கடந்து சமீபத்தில் ஓப்போ நிறுவனத்தின் ரெனோ மொபைல் ‍ஃபோன்  10x வரை Zoom செய்து தொலைதூரத்தில் உள்ள காட்சி களைக்கூட க்ளோசப்பில் எடுக்கின்ற ஒரு புதிய வகையான மொபைலை அறிமுகப்படுத்தி இருக்கு.

எங்கோ தொலை தூரத்தில் இருப்பவர்களை அவர்களுக்கே தெரியாமல், அவர்களின் அங்க அசைவுகளை இந்த ஜூம் வகை மொபைல் கேமிராவின் மூலம் ஃபோட்டோ, வீடியோ எடுப்பதினால் பல்வேறு வகையான சிக்கல்கள் ஏற்பட வாய்ப்பிருக்கு. எதுக்கெடுத்தாலும் மிரட்டல் விடுத்தல், இணையத்தில் புகைப்படத்தை வீடியோவை அப்லோடு செய்வேன் என்று ப்ளாக் மெயில் செய்யும் சமூக விரோதிகளுக்கு இதுபோன்ற வகை கேமிரா கொண்ட மொபைல் ஃபோன்கள் சாதகமாக இருக்கு.
தொழில் நுட்பம் வேகமாக வளர்ந்து வரும் சூழலில் ஒவ்வொன்றையும் எங்கே எந்த தயாரிப்புகளில் புகுத்தி அதனை  எப்படி கையாள வேண்டும் என்ற கட்டுப்பாடுகளை எல்லா நாடுகளும் கொண்டு வர முயற்சிக்கவேண்டும்.
சமூகத்தில் குற்றங்களை உருவாக்குவதும் தொழில் நுட்பம்தான். அதே குற்றங்களை கண்டுபிடிப்பதும் இதே தொழில் நுட்பம் தான்.  ஆன்ட்ராய்டு மொபைல் ஃபோன்களில் இத்தகைய வசதி கொண்ட கேமிராக்கள் என்றும் ஆபத்தானவையே.. என்ற கட்டுப்பாடுகளை எல்லா நாடுகளும் கொண்டு வர முயற்சிக்கவேண்டும்.
சமூகத்தில் குற்றங்களை உருவாக்குவதும் தொழில் நுட்பம்தான். அதே குற்றங்களை கண்டுபிடிப்பதும் இதே தொழில் நுட்பம் தான்.  ஆன்ட்ராய்டு மொபைல் ஃபோன்களில் இத்தகைய வசதி கொண்ட கேமிராக்கள் என்றும் ஆபத்தானவையே..🌐
Attachments area