இம்ரான் கான் காஷ்மீர் குறித்துப் பேசிய விவகாரங்களுக்கு ஆதரவாக அங்கு பேரணிகளும் ஊர்வலங்களும் நடத்த நேற்று முன் தினம் சனிக்கிழமை, காஷ்மீரின் பல இடங்களில் முயற்சிகள் நடந்தன.
ஆனால், அவற்றைத் தடுக்க பாதுகாப்பு படையினர் தடுக்க முயன்றதால் இரு தரப்புக்கும் இடையே மோதல் உண்டானது. இதனிடையே, சனிக்கிழமை ஜம்மு – காஷ்மீரின் ராம்பன் மாவட்டத்தில் ஹிஸ்புல் முஜாஹிதீன் அமைப்பைச் சேர்ந்த பயங்கரவாதிகளுடன் நடந்த துப்பாக்கிச்சூட்டில் அந்த அமைப்பைச் சேர்ந்த மூவர் கொல்லப்பட்டிருப்பதாக காவல் துறையினர் தெரிவித்துள்ளனர்.
@ காவல் துறையுடன் மோதலில் ஈடுபட்டவர்களில் எட்டு பேர் ராம்பனில் கைது செய்யப்பட்டனர்.🌐