இயக்குனர் விஜய் ஐஸ்வர்யாவை திருமணம் செய்து கொள்ளப் போவதாக செய்திகள் வந்துள்ளன.

தமிழில் பல வெற்றி படங்களை தந்த இயக்குனர் A L விஜய் அடுத்த மாதம் 11ம் தேதி டாக்டர் ஐஸ்வர்யாவை திருமணம் செய்து கொள்ளப் போவதாக நம்பத்தகுந்த வட்டாரங்களில் இருந்து செய்திகள் வந்துள்ளன.

தமிழில் மதராசபட்டிணம் , தெய்வத்திருமகள், சைவம்
போன்ற வெற்றிப் படங்களைத்  தந்துள்ள விஜய், இதற்கு முன் நடிகை அமலா பாலை திருமணம் செய்திருந்தார்.ஆனால் அவர்களுக்கிடையே ஏற்பட்ட கருத்து வேறுபாட்டினால் இருவரும் சமரசமாக பிரிந்து விடுவது என முடிவெடுத்தார்கள். அதன்படியே, 2017 ஆம்  வருடம் பிப்ரவரி மாதம் இருவருக்கும் விவாகரத்து வழங்கப்பட்டது.அதன் பின்னர், இப்போது விஜய்யின் குடும்பத்தினரால் இப்பெண் தேர்ந்தெடுக்கப்பட்டு விஜய்க்கும் அவருக்கும் திருமணம் நிச்சயிக்கப்பட்டுள்ளது. இதைப் பற்றி விஜய் விரைவில் அறிவிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.