இருபது ஓவர் கிரிக்கெட் போட்டி: இந்தியா- அயர்லாந்து நாளை மோதல்

இந்தியா- அயர்லாந்து அணிகளுக்கிடையேயான முதல் இருபது ஓவர் கிரிக்கெட் போட்டி நாளை டப்லினில் தொடங்கவிருக்கிறது.

டப்லின்,
விராட் கோலி தலைமையிலான இந்திய அணி, இங்கிலாந்து அணியுடன் 3 இருபது ஓவர் போட்டி, 3 ஒரு நாள் போட்டி மற்றும் 5 டெஸ்ட் போட்டிகளில் விளையாட இருக்கிறது. வரும் ஜூலை 3-ஆம் தேதி தொடங்கும் இப்போட்டிகள் செப்டம்பர் மாதம் வரை இங்கிலாந்தில் நடைபெற இருக்கின்றன. இதனிடையே கிரிக்கெட்டில் கத்துக்குட்டியான அயர்லாந்து அணியுடன், இந்திய அணி 2 இருபது ஓவர் போட்டிகளில் விளையாட இருக்கிறது.
முன்னதாக ஆப்கானிஸ்தானுக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் அசத்தல் வெற்றி பெற்ற இந்திய அணி, அதே உத்வேகத்துடன் அயர்லாந்து அணியை எதிர்கொள்ளும். அதே சமயம் கடந்த போட்டிகளில் சிறப்பாக ஆடியுள்ள அயர்லாந்து அணி, இந்திய அணிக்கு ஒரு பெரும் சவாலாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது. அயர்லாந்து தலைநகர் டப்லினில் நாளை (ஜூன் 27) தொடங்கும் இப்போட்டியானது இந்திய நேரப்படி இரவு 8.30 மணிக்கு சோனி நிறுவனம் ஒளிபரப்புகிறது.

Leave a comment

Your email address will not be published.