இறக்குமதி செய்யப்படும் சில பொருட்களுக்கு 100 சதவீத வரி விதிக்கப்படுவதாக இந்தியா மீது அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் குற்றம் சாட்டியுள்ளார். கனடாவின் கியூபெக் நகரில் நடைபெற்ற ஜி7 நாடுகளின் மாநாட்டில் இதனைக் கூறியுள்ளார். அவர் மேலும் கூறியதாவது, அமெரிக்காவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் சில பொருட்களுக்கு இந்தியா 100 சதவீதம் வரி விதிக்கிறது. அமெரிக்காவை கொள்ளையடிக்கும் நாடுகளின் அனைத்து வர்த்தக ஒப்பந்தங்களும் தடை செய்யப்படும் என்றும் எச்சரிக்கை செய்துள்ளார். அமெரிக்காவை அனைவரும் சுரண்டுகிறார்கள் என்றும் ட்ரம்ப் குற்றம் சாட்டினார்.
கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூட்டோ வர்த்தக வரிவிதிப்பு விவகாரத்தில் நேர்மையற்று நடந்து கொள்கிறார் என்று கூறி ஜி7 மாநாட்டின் முடிவில் வழக்கப்பட்ட கூட்டு அறிக்கைக்கான ஆதரவையும் அமெரிக்க அதிபர் திரும்ப பெற்றார். இந்தியா மட்டுமல்ல, வேறு சில நாடுகளும் 100 சதவீத வரி விதிக்கின்றன. ஆனால் நாங் கள் அதுபோல வரி விதிக்கவில்லை என்றார். ஹார்லி டேவிட்சன் மோட்டார் சைக்கிளுக்கு இந்தியா அதிக இறக்குமதி வரி விதித்து வருவது குறிப்பிடத்தக்கது.