இளம் பெண் கற்பழிப்பு, கொலை வழக்கை ஆளும் கட்சி எம் எல் ஏ செய்திருப்பதை கடுமையாக கண்டிக்க வேண்டாமா?

உத்தரப்பிரதேசம் மாநிலம் பா.ஜ.க. எம்.எல்.ஏ. குல்தீப் சிங் செங்கார் மற்றும் அவரது சகோதரர்கள் கடந்த ஆண்டு ஜூன் மாதம் 17-ம் தேதி தன்னை பாலியல் பலாத்காரம் செய்து விட்டதாக இளம்பெண் ஒருவர் போலீசில் புகாரளித்திருந்தார். இதனையடுத்து, அந்த புகாரை வாபஸ் பெறும்படி எம்.எல்.ஏ.வின் அடியாட்கள் அப்பெண்ணின் தந்தையை தாக்கியதாக மற்றொரு புகார் அளிக்கப்பட்டது. மேற்கண்ட புகார்களின் மீது போலீசார் நடவடிக்கை எடுக்காத நிலையில், அந்த பெண் முதல்வர் யோகி ஆதித்யநாத்தின் வீட்டின் முன் தீக்குளிக்க முயன்றார். இதற்கிடையே, பழைய வழக்கு ஒன்றில் கடந்த 5-ம் தேதி திடீரென அப்பெண்ணின் தந்தை சுரேந்திரா சிங் கைது செய்யப்பட்டு போலீஸ் காவலில் கடந்த 11-ம் தேதி உயிரிழந்தார். இச்சம்பவம் தொடர்பாக அலகாபாத் உயர் நீதிமன்றம் தாமாகவே விசாரிக்க முன்வந்தது. நீதிபதிகள் பா.ஜ.க. எம்.எல்.ஏ. குல்தீப் சிம்ஹ் செங்கார்-ஐ உடனடியாக கைது செய்யுமாறு சி.பி.ஐ. அதிகாரிகளுக்கு உத்தரவு பிறப்பித்தனர். பாதிக்கப்பட்ட பெண்ணால் பதிவு செய்யப்பட்ட முதல் தகவல் அறிக்கையின் அடிப்படையிலும், இதர புகார்களின் படியும் 👇🏾🌐
👆இவ்வழக்கு பரிசீலிக்கப்பட வேண்டும் எனவும் குறிப்பிட்ட நீதிபதிகள், இதில் தொடர்புடைய நபர்களுக்கு முன்னர் அளிக்கப்பட்ட ஜாமினும் ரத்து செய்யப்பட வேண்டும் என உத்தரவிட்டனர். இதைதொடர்ந்து, உன்னாவ் தொகுதி பா.ஜ.க. சட்டமன்ற உறுப்பினர் குல்தீப் சிங் சென்கார்-ஐ மாலை சி.பி.ஐ. அதிகாரிகள் கைது செய்தனர்.
@ இளம் பெண் கற்பழிப்பு, கொலை வழக்கை ஆளும் கட்சி எம் எல் ஏ செய்திருப்பதை கடுமையாக கண்டிக்க வேண்டாமா?🌐