ஈரானிடம் இருந்து கச்சா எண்ணெய் வாங்குவதை நிறுத்தப் போவதில்லை: அமெரிக்காவுக்கு துருக்கி பதிலடி

ஈரானிடம்  இருந்து  கச்சா எண்ணெய் வாங்குவதை நிறுத்தப் போவதில்லை என்று துருக்கி அமெரிக்காவுக்கு பதிலளித்துள்ளது.

இதுகுறித்து துருக்கியின் பொருளாதார அமைச்சர் நிகத் கூறும்போது, “ஈரானிடம் கச்சா எண்ணெய் வாங்கக் கூடாது என்று ஐக்கிய நாடுகள் சபையில் முடிவு எடுத்தால் நாங்கள் அதை பின்பற்ற தயராக இருக்கிறோம். ஆனால் ஈரானிடம் எண்ணெய் வாங்காதீர்கள் என்று அமெரிக்கா கூறினால் ஈரானிடம் எண்ணெய் வாங்குவதை நாங்கள் நிறுத்த போவதில்லை.

அமெரிக்க அதிபர் ட்ரம்ப் (இடது), துருக்கி அதிபர் எர்டோகன் (வலது).

 

எங்களது சகோதர நாட்டுக்கு எதிராக நடக்கும் இந்த  நடவடிக்கை கண்டு நாங்கள் அமைதியாக இருக்கப் போவதில்லை” என்று கூறியுள்ளார்.

சமீபத்தில் ரஷ்யாவிடமிருந்து ஏவுகணைகள் வாங்கியதற்காக துருக்கி மீது அமெரிக்க பொருளாதாரத் தடைகளை விதித்தது. இந்த நிலையில் ஈரானுக்கு தனது ஆதரவை துருக்கி அளித்துள்ளது.

அமெரிக்க அதிபராக டொனால்டு ட்ரம்ப் பதவியேற்ற பிறகு, ஈரானுடனான அணு சக்தி ஒப்பந்தத்தை முறிப்பேன் என்றும் ஈரானுடனான அணுஆயுத ஒப்பந்தத்தை பைத்தியக்காரத்தனமானது என்று ட்ரம்ப் கடுமையாக விமர்சித்து வந்தார்.

இந்த நிலையில் ஈரானுடனான ஒப்பந்தத்திலிருந்து அமெரிக்கா விலகியது. அதனைத் தொடர்ந்து ஈரான் மீது பொருளாதர தடைகளை அமெரிக்கா விதித்து வருகிறது.

இந்த நிலையில் தற்போது ஈரானின் முக்கிய ஏற்றுமதியான கச்சா எண்ணெயை  பிற நாடுகள் வாங்கக் கூடாது என்று அமெரிக்கா மிரட்டல் விடுத்தது குறிப்பிடத்தக்கது.

Leave a comment

Your email address will not be published.