உசிலம்பட்டியில் அனுமதியின்றி சட்ட விரோதமாக வைக்கப்பட்ட பேனர்கள்

உசிலம்பட்டியில் அனுமதியின்றி சட்ட விரோதமாக வைக்கப்பட்ட பேனர்கள் இன்னும் அகற்றப்படாததால் பொதுமக்கள் கொந்தளிப்பில் இருக்கின்றனர்.
@ சுபஸ்ரீ (23 ) இறந்த துயர சம்பவத்திற்கு பிறகும் பல இடங்களில் பேனர்கள் அகற்றப்படாமல் இருந்து வருகிறது. மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே இருக்கும் பகுதிகளில் பல்வேறு கட்சிகளின் சார்பிலும் திருமணம், காது குத்து போன்ற நிகழ்ச்சிகளுக்கு பேனர் வைக்கப்பட்டிருக்கின்றன. அனுமதியின்றி பேனர் வைக்க கூடாது என்ற சட்டம் இருக்கும் நிலையிலும் அதை மீறி பேனர்கள் வைக்கப்பட்டிருக்கின்றன. நகராட்சி அதிகாரிகளும் அதை அகற்றுவதற்கான நடவடிக்கையில் ஈடுபட வில்லை🌐