உடலுக்குக் குளிர்ச்சி தரும் சுரைக்காய் மோர்க்குழம்பு

உடலுக்குக் குளிர்ச்சி தரும் சுரைக்காய் மோர்க்குழம்பு

தேவையான பொருட்கள் :

சுரைக்காய் – சிறியது 1
கெட்டித்தயிர் – ஒரு கப்
கடுகு – ஒரு டீஸ்பூன்
கறிவேப்பிலை – சிறிதளவு
மஞ்சள்தூள், பெருங்காயத்தூள் – தலா ஒரு சிட்டிகை
கடலைப்பருப்பு – ஒரு டீஸ்பூன்,
துவரம்பருப்பு – ஒரு டீஸ்பூன்,
முழு உளுந்தம்பருப்பு – ஒரு டீஸ்பூன்
காய்ந்த மிளகாய் – 2,
எண்ணெய், உப்பு – தேவையான அளவு.

செய்முறை :

சுரைக்காயை தோல், விதை நீக்கி சிறியதுண்டுகளாக வெட்டி வேக வைத்து கொள்ளவும்.

தயிரை கடைந்து கொள்ளவும்.

கடலைப்பருப்பு, துவரம்பருப்பு, முழு உளுத்தம்பருப்பை வெறும் வாணலியில் தனித்தனியாக வறுத்துப் பொடித்கொள்ளவும்.

கடைந்த தயிருடன் உப்பு, மஞ்சள்தூள், வறுத்த பொடி சேர்த்துக் கரைத்து கொள்ளவும்.

வாணலியில் எண்ணெய்விட்டுச் சூடானதும் கடுகு, கறிவேப்பிலை, காய்ந்த மிளகாய், பெருங்காயத்தூள் சேர்த்து தாளித்த பின்னர் அதனுடன் மோர்க்கலவை, வேகவைத்த சுரைக்காய் சேர்த்து அடுப்பைக் குறைந்த தீயில் வைத்து, ஒரு கொதிவிட்டு இறக்கவும்.

சுவையான, உடலுக்குக் குளிர்ச்சி தரும் மோர்க்குழம்பு ரெடி.

Leave a comment

Your email address will not be published.