உதகை மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் பெய்து வரும் சாரல் மழையினால் நிலவும் காலநிலையை சுற்றுலாப் பயணிகள் அனுபவித்து வருகின்றனர்.

உதகை மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் பெய்து வரும் சாரல் மழையினால் நிலவும் காலநிலையை சுற்றுலாப் பயணிகள் அனுபவித்து வருகின்றனர்.

கேரளாவில் தென்மேற்கு பருவமழை பெய்து வரும் நிலையில், எல்லையில் உள்ள தமிழக மாவட்டமான நீலகிரியிலும் அதன் தாக்கம் காணப்படுகிறது. காலை முதல் இரவு வரையில் தொடர்ந்து சாரல் மழை பெய்து வருகிறது. இதனால், கடந்த சில நாட்களாக உதகை, குன்னூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் குளுகுளு காலநிலை நிலவி வருகிறது. இந்த நிலையில், இன்று காலை முதல் சாரல் மழை பெய்யத் துவங்கியது. இந்த சாரல் மழை காரணமாக வெப்பம் தனிந்த காலநிலை காணப்பட்டதால் சுற்றுலாப் பயணிகள் அதனை வெகுவாக அனுபவித்தனர்.