உத்தர பிரதேச மாநிலத்தில் ரயில் நிலையங்களுக்கு லஷ்கர்-இ-தொய்பா மிரட்டல்

லஷ்கர்-இ-தொய்பா அமைப்புகளிடம் இருந்து பிரோச்பூர் ரயில்வே மேலாளருக்கு மிரட்டல் கடிதம் அனுப்பப்பட்டுள்ளது.
லக்னோ,
உத்தர பிரதேச மாநிலத்தில் உள்ள ரயில் நிலையங்கள் வெடிகுண்டு வைத்து தகர்த்தப்படும் என்று   பிரோச்பூரில் ரயில்வே மேலாளருக்கு லஷ்கர்-இ-தொய்பா அமைப்புகளிடம் மிரட்டல் கடிதம் வந்துள்ளது.
மேலும் அந்த கடிதத்தில்  மாநிலங்களில் உள்ள வழிபாட்டு தலங்கள் மீது தாக்குதல் நடத்த இலக்கு வைத்துள்ளதாகவும் அந்த கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த கடிதம் மௌலானா அபு ஷேக் என்ற பயங்கரவாதியால் எழுதப்பட்டுள்ளது.
பயங்கரவாதிகள் மிரட்டல் விடுத்ததையடுத்து மாநிலத்தில் உள்ள முக்கிய ரயில்நிலையங்களில் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. பயணிகள் சந்தேகத்திற்கிடமான பொருட்கள் கிடந்தால் உடனடியாக போலீசாருக்கு தகவல் தெரிவிக்கும்படி தெரிவிக்கப்பட்டுள்ளது.
தொடர்ச்சியான கோடைவிடுமுறையால் ரயில்நிலையங்கள் மக்கள் கூட்டம் அலைமோதி வருகிறது. இதனை பயங்கரவாதிகள் சாதகமாக பயன்படுத்தி தாக்குதல் நடத்த திட்டமிட்டுள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.

Leave a comment

Your email address will not be published.