ரஷ்யாவில் நடைபெறும் உலகக் கோப்பை கால்பந்து திருவிழாவில் லீக் சுற்று முடிவடைந்து நாக் அவுட் சுற்று இன்று தொடங்குகிறது.
லீக் சுற்றில் 48 ஆட்டங்களில் 122 கோல்கள் அடிக்கப்பட்டுள்ளன. இதில் 9 கோல்கள் ஓன் கோல்களாகும். இதன் மூலம் உலகக் கோப்பை வரலாற்றில் அதிக ஓன் கோல்கள் அடிக்கப்பட்ட தொடராக ரஷ்ய உலகக் கோப்பை தொடர் மாறி உள்ளது.

அதிக கோல்கள் அடித்தவர்களின் பட்டியலில் இங்கிலாந்தின் ஹாரி கேன் உள்ளார். அவர், 3 ஆட்டங்களில் 5 கோல்கள் அடித்துள்ளார். பெல்ஜியத்தின் ரோமுலு லுகாகு, போர்ச்சுக்கலின் கிறிஸ்டியானோ ரொனால்டோ ஆகியார் தலா 4 கோல்களுடன் 2-வது இடத்திலும், ரஷ்யாவின் டெனிஸ் செரிஷேவ், ஸ்பெயினின் டிகோ கோஸ்டா ஆகியோர் தலா 3 கோல்களுடன் 3-வது இடத்திலும் உள்ளனர்.
இவை தவிர உருகுவேயின் லூயிஸ் சுவாரஸ், பிரேசிலின் கோடின்ஹோ உள்ளிட்ட 13 பேர் தலா இரு கோல்கள் அடித்துள்ளனர். மெஸ்ஸி, நெய்மர் உள்ளிட்ட 68 பேர் தலா ஒரு கோல் அடித்துள்ளனர்.