உலகளவில் யோகாவுக்கு அதிக முக்கியத்துவம் அளிப்பது இந்தியாவில் தான்: பிரதமர் நரேந்திர மோடி

உத்தரகாண்ட்: சர்வதேச யோகா தினத்தையொட்டி நாட்டு மக்களுக்கு பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார். உத்தரகாண்ட் மாநிலம் டேராடூனில் நடைபெறும் யோகா தின நிகழ்ச்சியில் 6,000 பேர் பங்கேற்றுள்ளனர். உலகளவில் யோகாவுக்கு அதிக முக்கியத்துவம் அளிப்பது இந்தியாவில் தான் என்று பிரதமர் மோடி கூறியுள்ளார். யோகா பயிற்சியால் மன நிம்மதி அடையும், எதிர்காலத்தை கட்டமைக்க முடியும் எனவும் தெரிவித்தார். மனம், அறிவு, உடலை இணைத்து யோகா அமைதியை உருவாக்குகிறது என்று பிரதமர் கூறினார்.

இன்று சூரியன் உதிக்கும் இடமெல்லாம் யோகா தினம் கொண்டாடப்படுகிறது என்றும், இந்தியா அதற்கு பெருமை கொள்ள வேண்டும் என்றும் கூறினார். யோகா மூலம் ஒரு புதிய அனுபவம் கிடைப்பதாக உத்தரகாண்ட் – டேராடூனில் சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு பிரதமர் மோதி  உரையாற்றினார். டேராடூன் முதல் டப்ளின் வரை, ஷாங்காய் முதல் சிகாகோ வரை, ஜகார்த்தா முதல் ஜொஹனஸ்பர்க் வரை எங்கு நோக்கினாலும் யோகா தான் என்றும் கூறினார். அனைவரையும் ஒன்றிணைக்கும் வலிமையான ஆற்றலாக யோகா திகழ்கிறது என்று பிரதமர் மோடி குறிப்பிட்டார்.

Leave a comment

Your email address will not be published.