உலகிலேயே அதிக சம்பளம் வாங்கும் நடிகைகளின் பட்டியலில் பிரபல ஹாலிவுட் நடிகையான ஸ்கார்லெட் ஜோஹன்சன் முதல் இடத்தை பிடித்துள்ளார்.

உலகிலேயே அதிக சம்பளம் வாங்கும் நடிகைகளின் பட்டியலில் பிரபல ஹாலிவுட் நடிகையான ஸ்கார்லெட் ஜோஹன்சன் முதல் இடத்தை பிடித்துள்ளார்.

வாஷிங்டன்:

அமெரிக்காவின் ‘போர்ப்ஸ்’ இதழ் ஆண்டு தோறும் உலக பணக்காரர்களின் பட்டியலை வெளியிட்டு வருகிறது. அத்துடன் உலக அளவில் பல்வேறு துறைகளில் சிறந்து விளங்குபவர்களை தேர்ந்தெடுத்து பட்டியலிட்டு வருகிறது.

அந்த வகையில், அதிக சம்பளம் வாங்கும் நடிகைகளின் பட்டியலை தற்போது போர்ப்ஸ் இதழ் வெளியிட்டு உள்ளது. இதில் பிரபல ஹாலிவுட் நடிகையான ஸ்கார்லெட் ஜோஹன்சன் முதல் இடத்தை பிடித்துள்ளார்.

சூப்பர் ஹீரோ கதாபாத்திரங்களை மையப்படுத்தி எடுக்கப்பட்ட ‘அவெஞ்சர்ஸ்’ படங்களில் நடித்து புகழ்பெற்ற ஸ்கார்லெட் ஜோஹன்சனின் தற்போதைய சம்பளம் ரூ.400 கோடியாகும்.

இவருக்கு அடுத்தபடியாக, ஹாலிவுட் நடிகை சோபியா வெர்ஹரா இப்பட்டியலில் 2-வது இடத்தில் உள்ளார். இவர் தற்போது ரூ.329 கோடி சம்பளம் வாங்குகிறார்.

அதே போல் ரூ.250 கோடி சம்பளத்துடன் ஹாலிவுட் நடிகை ரீசி வித்தர்ஸ்பூன் 3-வது இடத்திலும், ரூ.243 கோடி சம்பளத்துடன் ஹாலிவுட் நடிகை நிக்கோலே கிட்மேன் 4-வது இடத்திலும் உள்ளனர்.