உலகில் வாழும் ஏழைகளில் மூன்றில் ஒரு பங்கினர் இந்தியாவில் வாழ்கின்றனர்.

உலகில் வாழும் ஏழைகளில் மூன்றில் ஒரு பங்கினர் இந்தியாவில் வாழ்கின்றனர். இந்தியாவில் ஏழ்மை பரவலாகக் காணப்படுகின்றது. இந்திய திட்டக் குழுவினால் பயன்படுத்திய மதிப்பீட்டு வரயறையின்படி, 27.5% மக்கள் வறுமைக்கோட்டுக்குக் கீழே வாழ்கின்றனர்; உலக வங்கியின் கணிப்பீட்டின்படி, இந்திய மக்கள் தொகையில் 42 சதவீதம் மக்கள் அனைத்துலக வறுமைக்கோட்டுக்குக் கீழே வாழ்கின்றனர். இது 1980 ஆம் ஆண்டில் 90 சதவீதமாக இருந்தது. அனைத்துலக வறுமைக்கோட்டின் படி நகரத்தில் வாழ்வோர் நாளொன்றுக்கு 1.25 டாலருக்கும் குறைவாக ஈட்டுவதும் சிற்றூர்களில் வாழ்வோர் நாளொன்றுக்கு இந்திய ரூபாய் 34.3 க்கும் கீழாக ஈட்டுவதும். ஐக்கிய நாட்டு வளர்ச்சி திட்டப்படியான, மனிதவள மேம்பாட்டு கண்ணக்குப்படி (HDI), இந்தியாவின் 75.6% மக்கள் தொகையினர் ஒரு நாளைக்கு தலா ரூ 170 குறைவான வருமானத்தில் வாழ்கின்றனர்,🌐