மாஸ்கோ : ரஷ்யாவில் நடந்து வரும் உலக கோப்பை கால்பந்து தொடரின் ‘ரவுண்ட்-16’ போட்டியில், பெல்ஜியம், ஜப்பான் அணிகள் மோதின. இதில் 3-2 என்ற கோல் கணக்கில் ஜப்பானை வீழ்த்திய பெல்ஜியம், காலிறுதிக்கு தகுதி பெற்றது. ஜப்பான் அணியின் ஹராகுச்சி, இனுய் தலா ஒரு கோல் அடித்தனர். பெல்ஜியம் அணியில் பென்டோன்கென், பெல்லாய்னி, சாட்லி தலா ஒரு கோல் அடித்தனர். குறிப்பாக ஆட்டத்தின் கடைசி நிமிடத்தில் சாட்லி அடித்த கோலால், பெல்ஜியம் திரில் வெற்றி பெற்றது.
உலக கோப்பை கால்பந்து: ஜப்பானை வீழ்த்தியது பெல்ஜியம்
