எங்கள் சுதந்திரம் பற்றி பேசுங்கள்’; இந்தியாவுக்கு பலுசிஸ்தான் கோரிக்கை
குவெட்டா: ‘பாகிஸ்தானிலிருந்து, பலுசிஸ்தான் பகுதி சுதந்திரம் பெறுவது பற்றி, சர்வதேச அளவில், இந்தியா குரல் எழுப் வேண்டும்’ என, அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
பாகிஸ்தானில், இயற்கை வளமிக்க பகுதி, பலுசிஸ்தான். இப்பகுதி, பாகிஸ்தானுடன் இணைக்கப்ட்டதை, ஆரம்பத்திலிருந்தே அப்பகுதி மக்கள் எதிர்த்து வருகின்றனர். இங்கே, பாகிஸ்தான், தொடர்ந்து மனித உரிமை மீறல்களில் ஈடுபட்டு வருவதாக, அப்பகுதி மக்கள் குற்றம்சாட்டி வருகின்றனர். சமீபகாலமாக, சுதந்திர பலுசிஸ்தான் கோரிக்கை அதிகரித்துள்ளது.
இந்நிலையில், இந்தியாவின், 73வது சுதந்திர தினத்தை முன்னிட்டு, வாழ்த்து தெரிவித்த பலுசிஸ்தான் மக்கள், ‘பாகிஸ்தானில் தாங்கள் படும் துன்பங்கள் பற்றியும், தங்கள் சுதந்திரம் பற்றியும், இந்தியா, சர்வதேச அளவில், குரல் எழுப்ப வேண்டும்’ என, கோரிக்கை விடுத்துள்ளனர்.
பலுசிஸ்தானை சேர்ந்த அட்டா பலோக் கூறுகையில், ” சுதந்திரம் அடைந்து, 72 ஆண்டுகள் நிறைவில், இந்தியா மாபெரும் வளர்ச்சி பெற்றள்ளது. இன்று, உலகம் முழுவதும், இந்தியா பெரிதும் மதிக்கப்படுகிறது. 👇🏾🌐
எங்களுக்கு, இந்தியா எப்போதும் ஆதரவு அளித்து வருகிறது. பாகிஸ்தானில் நாங்கள் படும் துன்பத்தையும், எங்களின் சுதந்திரம் பற்றியும், சர்வதேச அளவில் இந்தியா குரல் எழுப்ப வேண்டும். ஜெய்ஹிந்த்,” என்றார்.🌐