எங்கே போகப்போகிறார் தங்க தமிழ் செல்வன்?

🌍செந்தில் பாலாஜியைத் தொடர்ந்து தி.மு.க முகாமுக்கு இடம்பெயரும் முயற்சியில் இருக்கிறார் அ.ம.மு.க கொள்கைப் பரப்புச் செயலாளர் தங்க தமிழ்ச்செல்வன். “அறிவாலயத்தில் ஸ்டாலினைச் சந்தித்துப் பேச இருக்கிறார் தங்க தமிழ்ச்செல்வன். எடப்பாடி பழனிசாமி தரப்பிலிருந்தும் தொடர் முயற்சிகள் நடந்துகொண்டிருக்கின்றன”
# தி.மு.க முகாமில் இருந்து தூண்டில் வீசப்படுவதை அறிந்த எடப்பாடி பழனிசாமியோ, `கொஞ்சம் பொறுமையாக இருங்கள் தங்கம். மாவட்டப் பொறுப்பை வழங்க முடியாவிட்டாலும் மாநில அளவிலான பொறுப்பைக் கொடுக்கிறேன். உங்களுடைய பொருளாதார சிரமங்களை எல்லாம் பார்த்துக்கொள்கிறேன். வேறு எங்கும் போய்விட வேண்டாம்’ என வலியுறுத்திக் கூறியிருக்கிறார்.எங்கே போகப்போகிறார் தங்க தமிழ் செல்வன்?