எந்த வயதில் தியானம் செய்யலாம்?

தியானத்தின் மூலம் எளிதில் மன அமைதி பெறலாம். பிராணாயாமம் எனும் மூச்சுப்பயிற்சி மிக முக்கியமானது. தியானத்தைத் துவங்கும் முன்பாக மூச்சுப்பயிற்சி செய்ய வேண்டும். மூச்சின் வழியாகவே நம் உயிருக்குத் தேவையான ஆக்சிஜனை உடல் எடுத்துக்கொள்கிறது. தேவையற்ற கார்பன் டை ஆக்சைடை  சுவாசத்தின் வழியாக வெளியே அனுப்பி வைக்கிறது.

ஆழமான மூச்சுப்பயிற்சியின் வழியாக உயிர் இயக்கத்துக்குத் தேவையான ஆக்சிஜன் முழுமையாகக் கிடைக்கிறது. போதிய ஆக்சிஜன் கிடைக்கும்போது மூளை சுறுசுறுப்பாக இருக்கும். கிரியேட்டிவாக சிந்திக்கும். தியானத்தை வழக்கப்படுத்திக் கொள்வதன் மூலம், உடல், மன நோய்களில் இருந்து நம்மை முழுமையாகத் தற்காத்துக் கொள்ளலாம்.

எந்த வயதினரும் தியானம் செய்யலாம். இதற்கு வயது பாகுபாடெல்லாம் இல்லை. அவரவர் வயதுக்கு ஏற்ப புரிந்துகொள்ளும் திறனின் அடிப்படையில் தியான முறைகள் இருக்கும். இன்றைய காலகட்டத்தில், ஒரு குழந்தை சரியாகப் பேசத் தொடங்கும் காலத்தில் இருந்தே  தியானப் பயிற்சிகளை மேற்கொள்ளலாம். ஐந்து வயதில் இருந்து குழந்தைகள் மனதை உற்று நோக்கவும் கட்டுப்படுத்தவும் பழகிக்கொண்டால் அவர்கள் வளர் இளம் பருவத்தை எட்டும்போது பெரிய அளவில் மனக்குழப்பங்களுக்கு ஆளாக மாட்டார்கள். திருமணம், வேலை என்று வரும்போது தனக்கானதைத் தேர்வு செய்வதும் திறனை மேம்படுத்திக் கொள்வதும் எளிதாகும்.

Leave a comment

Your email address will not be published.