‘எனை நோக்கி பாயும் தோட்டா’ இறுதிக்கட்டப் படப்பிடிப்பு தொடக்கம்

‘எனை நோக்கி பாயும் தோட்டா’ படத்தின் இறுதிக்கட்டப் படப்பிடிப்பு சென்னையில் இன்று (ஜுலை 16) முதல் தொடங்கப்பட்டு இருக்கிறது.

கெளதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் தனுஷ், மேகா ஆகாஷ் உள்ளிட்ட பலர் நடிப்பில் தொடங்கப்பட்ட படம் ‘எனை நோக்கி பாயும் தோட்டா’. தர்புகா சிவா இசையமைப்பாளராக பணிபுரிந்து வருகிறார்.

இப்படத்தின் படப்பிடிப்புக்கு இடையே தனுஷ் ‘விஐபி 2’, ‘ப.பாண்டி’, ‘வடசென்னை’, ‘மாரி 2’ என தொடர்ச்சியாக நடிக்கத் தொடங்கினார். இதனால் ‘எனை நோக்கி பாயும் தோட்டா’ படத்தின் படப்பிடிப்பு தாமதமானது. இதனால் விக்ரம் நடிப்பில் ‘துருவ நட்சத்திரம்’ படத்தில் கவனம் செலுத்தத் தொடங்கினார் கெளதம் வாசுதேவ் மேனன்.

தற்போது இதர படங்களை முடித்துவிட்டு, மீண்டும் ‘எனை நோக்கி பாயும் தோட்டா’ படத்திற்கு தேதிகள் ஒதுக்கியிருக்கிறார் தனுஷ். இதனைத் தொடர்ந்து இன்று (ஜுலை 16) முதல் சென்னையில் படப்பிடிப்பு தொடங்கி நடைபெற்று வருகிறது. இதில் தனுஷ் – சசிகுமார் சம்பந்தப்பட்ட காட்சிகளை படமாக்கி வருகிறார் கெளதம் வாசுதேவ் மேனன்.

மேலும், ஜுலை 20-ம் தேதி இப்படத்தின் புது லோகோ வெளியிடப்படும் என்று படக்குழு அதிகாரபூர்வமாக அறிவித்திருக்கிறது. ‘எனை நோக்கி பாயும் தோட்டா’ படத்தின் பணிகளை முழுமையாக முடித்துவிட்டு, ‘துருவ நட்சத்திரம்’ படத்தின் இறுதிக்கட்டப் படப்பிடிப்பில் கவனம் செலுத்த திட்டமிட்டு இருக்கிறார் கெளதம் வாசுதேவ் மேனன்.

Leave a comment

Your email address will not be published.