இந்தியாவின் தகவல் தொழில்நுட்பத் தலைநகரம் என அழைக்கப்படும் பெங்களுரில் ரியல் எஸ்டேட் துறையில் ஒரு புதிய போக்கு நிகழ்ந்து வருகின்றது. கட்டுமான நிறுவனங்கள் சொகுசு வீடு கட்டும் திட்டங்களில் அதிகக் கவனம் செலுத்தி வருகின்றன. வெளி நாடுவாழ் இந்தியர்கள் (NRI) சொகுசுக் குடியிருப்புகளை வாங்குவதற்கும் விற்பதற்கும் அதிக ஆர்வம் காட்டுவதுதான் இதற்குக் காரணம் ஆகும்.
ரிஸ்க் எடுத்தால் நஷ்டத்துக்கு வாய்ப்பில்லை ஆடம்பரமான சொகுசு வீடு கட்டுவோரின் எண்ணிக்கை குறைவுதான். இருந்தாலும், கட்டுமான நிறுவனங்கள் தற்போது இதில்தான் ஈடுபட்டுள்ளன. ரியல் எஸ்டேட் துறைக்கே உரிய ரிஸ்க் இதில் இருந்தாலும் வாடிக்கையாளர்களையும் கட்டுமான நிறுவனங்களையும் அது பாதிப்பதில்லை. காரணம், இடம் மற்றும் குடியிருப்புகளின் சொத்து மதிப்பு ஒவ்வொரு ஆண்டும் உயர்ந்து கொண்டே வருகிறது. மும்பையில் முக்கியமான பகுதிகளில் நிலம் மற்றும் வீடுகளின் மதிப்பு 2016 ஆம் ஆண்டில் இருந்ததைக் காட்டிலும் தற்போது 20% உயர்ந்துள்ளது.