என் கண்ணீருக்கு காரணம் காங். அல்ல: கர்நாடக முதல்வர் குமாரசாமி விளக்கம்

நான் காங்கிரஸ் கட்சியையோ, அதன் தலைவர்களின் பெயர் களையோ சொல்லி அழவில்லை. என் கண்ணீருக்கு காங்கிரஸ் காரணம் இல்லை” என கர்நாடக முதல்வர் குமாரசாமி விளக்கம் அளித்துள்ளார்.

கடந்த 14-ம் தேதி பெங்களூரு வில் உள்ள மஜத தலைமை அலுவலகத்தில் நடைபெற்ற பாராட்டு விழாவில் முதல்வர் குமாரசாமி பேசுகையில், “உங் களுடைய அண்ணனோ, தம்பியோ முதல்வராகி விட்டார் என நீங்கள் அனைவரும் மகிழ்ச்சியாக இருக் கிறீர்கள். ஆனால் முதல்வரான பிறகு நான் மகிழ்ச்சியாக இல்லை. நான் விஷத்தை உண்டு விட்டு, வலியோடு இருக்கிறேன்.

க‌டவுள் இந்த பதவியை எனக்கு கொடுத்திருக்கிறார். எத்தனை நாட்கள் நான் பதவியில் இருக்க வேண்டும் என அவர் நினைக் கிறாரோ, அத்தனை நாட்கள் முதல் வராக இருப்பேன். அதுவரை கர்நாடக மக்களுக்கு நல்லது செய்வேன். என் தந்தை தேவ கவுடாவின் நிறைவேறாத ஆசை எல்லாவற்றையும் நிறைவேற்று வேன்” என்று கூறிக்கொண்டே கண்ணீர்விட்டு அழுதார்.

முதல்வர் குமாரசாமி பொதுவெளியில் கண்ணீர் விட்டு அழுத சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதற்கு மத்திய நிதி அமைச்சர் அருண் ஜேட்லி, “குமாரசாமியின் கண்ணீருக்கு காங்கிரஸே காரணம். கூட்டணி ஆட்சியின் பெயரால் அவரை துன்புறுத்துகிறார்கள்’’ என்றார்.

இதனிடையே கர்நாடக பாஜக மாநில தலைவர் எடியூரப்பா, “குமார‌சாமிக்கு மிகச் சிறந்த நடிகர் விருது கொடுக்க வேண்டும். நடிப்பு திறமையை காட்டி, மக்களை முட்டாள்களாக்குகிறார்’’ என்றார்.

கர்நாடக துணை முதல்வரும், காங்கிரஸ் மூத்த தலைவருமான பரமேஸ்வர், ‘’முதல்வர் குமாரசாமி கட்டாயம் மகிழ்ச்சியாக இருக்க வேண்டும். அவர் மகிழ்ச்சியாக இருந்தால்தான் மக்கள் மகிழ்ச்சி யுடன் இருக்க முடியும்” என்றார்.

இந்நிலையில் கர்நாடக முதல்வர் குமாரசாமி, ‘’அது எங்கள் கட்சியின் கூட்டம். எனவே நான் கொஞ்சம் உணர்ச்சிவசப் பட்டுவிட்டேன். நான் காங்கிரஸ் கட்சியின் பெயரையோ, அதன் தலைவர்களின் பெயர்களையோ எதையும் குறிப்பிட்டு பேச வில்லை. இதற்கு முன்புகூட காங்கிரஸ் குறித்து தவறாக பேசவில்லை. ஆனால் ஊடகங்கள் இதை காங்கிரஸுடன் ஒப்பிட்டு, எனது பேச்சை ஊதிப் பெரிதாக்கிவிட்டது. என் கண்ணீருக்கு காங்கிரஸ் காரணம் இல்லை. கூட்டணி ஆட்சியில் எந்த பிரச்சினையும் இல்லை’’ என்றார்.

Leave a comment

Your email address will not be published.